Tirunelveli

News July 5, 2025

மூலைக்கரைப்பட்டியில் கடன் வசூலிக்க சென்றவர் மீது தாக்குதல்

image

மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி பிரின்ஸ், வண்ணாரப்பேட்டை வங்கியில் பெற்ற டிராக்டர் கடனின் மூன்று மாத தவணையை செலுத்தவில்லை. இதையடுத்து, வங்கி ஊழியர் மாரியப்பன் நேற்று (ஜூலை.04) கடன் தொகை கேட்டு பிரின்ஸை அணுகியபோது, பிரின்ஸ் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், மூலைக்கரைப்பட்டி காவல்துறையினர் பிரின்ஸை வலைவீசி தேடி வருகின்றனர்.

News July 5, 2025

நெல்லையில் 20 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

image

நெல்லை அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இதற்காக விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணியிடமாறுதல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 167 பேர் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த நிலையில் 20 பேருக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் கிடைத்துள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News July 4, 2025

காவல்துறைக்கு வருவதற்கு காரணம் என் மனைவி – துணை காவல் ஆணையர்

image

திருநெல்வேலி பழைய பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு ஒரு வார புத்தாக்க பயிற்சி நடைபெறுகிறது. இன்றைய நிகழ்ச்சியில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் பேசினார். அவர் கூறியதாவது; தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் மாணவிகள் வெற்றி பெறலாம். மருத்துவத்துறையில் இருந்து காவல்துறைக்கு வந்ததற்கு என் மனைவியின் ஆதரவு முக்கிய காரணம் என்றார்.

News July 4, 2025

நெல்லை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு எழுத உள்ள 36,000 தேர்வர்கள்

image

நெல்லை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 12ஆம் தேதி நடைபெறுவது குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த தேர்வை மாவட்டத்தில் 108 இடங்களில் 132 மையங்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்வு 36 ஆயிரத்து 11 பேர் எழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வு மையத்தின் நிகழ்வுகள் வீடியோவில் பதிவு செய்யப்படும் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும்.

News July 4, 2025

நெல்லையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

நெல்லை மாநகர வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நாளை ஜூலை 5ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் கல்லூரியில் வைத்து பிற்பகல் 12:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இந்த முகாமிற்கான ஆயத்த பணிகளை கல்லூரியின் இயக்குனர் கிருஷ்ணகுமார் மற்றும் பேராசிரியர்கள் செய்து வருகின்றனர். *ஷேர் பண்ணுங்க

News July 4, 2025

நெல்லையில் அவசர உதவி எண் அறிவிப்பு

image

நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் கூட்டத்தில் யாராவது தவறினால் தகவல் தெரிவிக்கவும், உதவி செய்யவும் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 100, 0462 – 25 62 651 மற்றும் டவுன் காவல் நிலைய எண் 9498101726 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2025

நெல்லை மாவட்டத்தில் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

நெல்லையில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், நெல்லை மாவட்டம் தமிழக அளவில் 16ஆம் இடத்தை பெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 187 பள்ளிகள் உள்ளன. இதில் 4 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளில் 5745 பேரில் 5318 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 8, 2025

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய தகவல்

image

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி
மையம் செயல்படுகிறது. கல்வி ஆலோசனை பெற 9500324417, 9500524417 அழைக்கலாம். பொறியியல் பயில விரும்பும் மாணவர்கள், கலந்தாய்விற்கு விண்ணப்பக்க அரசு பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் நெல்லை மண்டல அலுவலகம், ராணி அண்ணா கல்லூரி ஆகிய 3 மையங்கள் செயல்படுகிறது. இத்தகவலை ஆட்சியர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார்.

News May 8, 2025

நெல்லை மாவட்ட அணைகளில் நீர் இருப்பு: பாபநாசம் அணையில் 84.55 அடி

image

நெல்லை மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம். பாபநாசம் அணையில் 84.55 அடி நீர் இருப்பு உள்ளது. 257 கன அடி நீர் வரத்து மற்றும் 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணையில் 100.6 அடி, மணிமுத்தாறு அணையில் 85.47 அடி, வடக்கு பச்சையாறு அணையில் 40.25 அடி, நம்பியாறு அணையில் 13.12 அடி மற்றும் கொடுமுடி ஆற்றில் 14.75 அடி நீர் இருப்பு உள்ளது.

News May 7, 2025

பாவங்கள் நீங்க வேண்டுமா பாபநாசத்திற்கு வாருங்கள்

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் ஸ்தலத்தில் அடியார்கள் வந்து தீர்த்த நீராடி பாபநாசரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும். எனவே இத்தலம் பாபநாசம் என்றானது. இத்தலத்தில் அகஸ்தியருக்கு ஈசன் திருக்கல்யாண கோலம் காட்டியதால் இத்தலத்தை கல்யாணபுரி என்றும் அழைப்பர். இக்கோவிலில் வரும் நான்காம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!