Tirunelveli

News August 5, 2025

கவின் கொலை.. சுர்ஜித் தாயாருக்கு சம்மன்!

image

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி, குற்றவாளி சுர்ஜித்தின் தயார் கிருஷ்ணகுமாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர், ஆகஸ்ட் 15க்குள் நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

News August 5, 2025

BREAKING: கவின் கொலை.. யாரும் தப்பிக்க கூடாது!

image

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கை நெல்லை நீதிபதி தலைமையில் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதில் இன்று, கவின் கொலை வழக்கில் யாரும் தப்பிக்க கூடாது. முறையாக விசாரணை நடத்தி 8 வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News August 5, 2025

நான்கு பேர் மீது குண்டாஸ்.. நெல்லை ஆட்சியர் உத்தரவு

image

அம்பை முடபாலத்தைச் சேர்ந்த முகேஷ் (20), சுனில் ராஜ் (19), முத்து (21), கணேசமூர்த்தி (22) ஆகியோர் கல்லிடைகுறிச்சியில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, பொது சொத்து சேதம் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர். அம்பை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வேண்டுகோளின்படி, மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையால், கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டார்.

News August 5, 2025

JOB ALERT: நெல்லை கூட்டுறவு வங்கியில் வேலை

image

நெல்லை இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கும் மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். நெல்லைக்கு குறிப்பிட்ட அளவு காலியிடங்கள் உள்ளன. ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு <>இங்கே கிளிக்<<>> செய்து பார்க்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு செப். 12ல் நடைபெறும். அரசு வேலையில் தேடுவோருக்கு SHARE செய்யவும்.

News August 5, 2025

நெல்லையில் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்

image

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் நேற்று அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அரசு சார்பில் தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண்கள் ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். இதற்கு www.tnuwwb.tn.gov.in என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெருமாள்புரத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை அணுகலாம். SHARE IT

News August 5, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன், தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும் இன்று (ஆக.04) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News August 5, 2025

கவின் கொலை – பட்டியலின ஆணையம் நெல்லை வருகை

image

பாளை கேடிசி நகரில் கடந்த 27ம் தேதி ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை செய்யப்பட்டார். கவின் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு தேசிய பட்டியலின ஆணையம் இன்று நெல்லை வந்துள்ளது. ஆணைய தலைவர் கிஷோர் மக்குவானா நெல்லையில் இரண்டு நாள் முகாமிட்டு இந்த வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்கிறார். மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடமும் ஆலோசனை நடந்து வருகிறது.

News August 4, 2025

காவல்கிணறு பெயர் வந்தது எப்படி தெரியுமா?

image

காவல்கிணறு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது திருநெல்வேலியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊர் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். காவல்கிணறு என்ற பெயர் வரக் காரணம், அந்தக் கிணறு ஒரு காலத்தில் ஊருக்கு காவல் தெய்வமாக இருந்திருக்கிறது. அதனால் தான் அதற்கு காவல் கிணறு என்று பெயர் வந்தது.

News August 4, 2025

நாளை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம், அம்பாசமுத்திரம் டவுன் சோனா மஹால், ராஜவல்லிபுரம், கோடகநல்லூர் கலந்தபனை ஆகிய பகுதிகளில் நாளை(ஆக.05) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெறும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News August 4, 2025

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கலெக்டர் அழைப்பு

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில்; நெல்லை மாவட்டத்தில் அரசு கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையில் “மதி சிறு தானிய உணவகம்” நடத்துவதற்கு விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக் குழு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம். வரும் 8ம் தேதிக்குள் திட்ட இயக்குனர், ஊரக வாழ்வாதார இயக்ககம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், நெல்லை என்ற முகவரியில் மனுவை அனுப்பி வைக்க வேண்டும்.

error: Content is protected !!