Tirunelveli

News January 7, 2025

நெல்லை 5336 ரவுடிகள் மீது நடவடிக்கை 

image

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது என்றும், 2024 ஆம் ஆண்டில் 5336 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று தகவல் தெரிவித்துள்ளார். இதில் 23 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2023ஆம் ஆண்டை விட 2024ஆம் ஆண்டில் கொலை வழக்கு 21 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

8 பெட்டியில் இருந்து 16 பெட்டிகளாக மாற்றம்

image

திருநெல்வேலி – சென்னை எழும்பூர் (20666/65) வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக வருகிற 11.01.2025 முதல் மாற்றப்படுகிறது. எனவே கூடுதல் இருக்கைகள் அதே வண்டியில் காண்பிக்கப்படும். WL ஆக நீங்கள் முன்பதிவு செய்தாலும் CNF ஆகிவிடும். எனவே தேவை உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும். Without Food option கொடுத்தால் டிக்கெட் விலை 300 வரை குறையும் என தெற்கு ரயில்வே இன்று தெரிவித்துள்ளது.

News January 7, 2025

ராக்கெட் ராஜாவின் கூட்டாளி கைது

image

கோவை ரத்தினபுரி போலீசார் நேற்று முந்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 8 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடியான ராஜ்குமார் கோவையில் மெத்தபெட்டமின் விற்றபோது கைது செய்யப்பட்டார். இவர் திசையன்விளையை சேர்ந்த ராக்கெட் ராஜாவின் கூட்டாளி என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2025

தமிழக காவல்துறைக்கு நெல்லை முபாரக் கண்டனம்

image

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் எதிர்கட்சிகள் விவசாயிகள் நடத்தும் போராட்டங்களுக்கு போக்குவரத்து நெரிசல், சட்ட ஒழுங்கு பிரச்சனை என காரணத்தை கூறி அனுமதி மறுக்கும் காவல்துறை மாநில முழுவதும் திமுகவின் போராட்டங்களுக்கு ஒரே இரவில் மேடை அமைத்து போராட்டம் நடத்த அனுமதி அளித்தது எப்படி? காவல்துறையின் இத்தகைய பாரபட்சம் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்க எம்பி கோரிக்கை 

image

டெல்லியில் மத்திய அரசின் சார்பில் தேசிய அளவில் உரம் மற்றும் ரசாயன செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது .இதில் பங்கேற்ற நெல்லை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் தமிழ்நாடு விவசாயிகளின் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி பேசினார் .தொடர்ந்து தமிழக விவசாயிகளுக்கு உர மானியத்தை அதிகரிப்பதோடு தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

News January 7, 2025

நெல்லையில் தனித் தொகுதி? – கலெக்டர் பதில்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(ஜன.6) வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, பகுஜன் சமாஜ் மாநில செயலாளர் தேவேந்திரன் நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகள் இருந்தபோதிலும் தனி தொகுதிகள் எதுவும் இல்லை எனவே தனி தொகுதிகளை உருவாக்க வேண்டும் என்றார். பதிலளித்த கலெக்டர் கார்த்திகேயன், தொகுதி மறு சீரமைப்பின்போது இது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தெரிவித்தார்.

News January 7, 2025

நெல்லை ஆட்சியர் அறிவிப்பு 

image

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களில் 69 சதவீதம் பேரின் ஆதாரங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிதாக சேரும் வாக்காளர்களின் ஆதாரங்கள் பெறப்பட்டு வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று (ஜன.6) தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

கருப்பு வெறுப்பாகி போனதா?: நெல்லை முபாரக் கண்டனம்

image

சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா அணிந்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்றிரவு(ஜன.6) வெளியிட்ட அறிக்கையில், ‘தோழமைக்கு அழகு அல்ல, கருப்பில் இருந்து பிறந்த கருப்பு சிவப்புக்கு கருப்பு வெறுப்பாகி போனதா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

News January 7, 2025

நெல்லை GH மாநில அளவில் 3வது இடம்!

image

நெல்லை அரசு மருத்துவமனையில், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கடந்த 2024 இறுதி வரை மொத்தம் 59 உறுப்புகளும், 42 திசுக்களுக்கு தானமாக பெறப்பட்டுள்ளது. மேலும், உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் 3வது இடத்தில் இருப்பதாகவும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் நேற்று(ஜன.6) பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

நெல்லையில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள்

image

#நெல்லையில் இன்று(ஜனவரி 7) காலை 10.30 மணிக்கு திருநெல்வேலி மாநகராட்சி பிரதான அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. #நெல்லை மத்திய மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் காலை 10 மணிக்கு வண்ணாரப்பேட்டையில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

error: Content is protected !!