India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.26) நடைபெறவிருந்த இளநிலைப் மற்றும் முதுநிலைப் பருவ எழுத்துத்தேர்வுகள் அனைத்தும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் மறு அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றுதல், முதியோர் உதவித்தொகை, குழந்தைகள் நலத்திட்ட உதவிகள், ஜாதி சான்றுகள், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திரளான மக்கள் மனு அளித்தனர். இதில் மொத்தம் 714 மனுக்கள் இன்று பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது நீர் பாசனம், இடுபொருட்கள் குறித்த குறைகளை கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் நாளை (நவ.26) மற்றும் நாளை மறுநாள் (நவ.27) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்ட்டில் தெரிவிக்கவும்!
திருச்சி தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வரும் கவியரசன் நேற்று மாணவர்களை புள்ளம்பாடி பகுதியில் இறக்கிவிட்டு சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரமேஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவர் டூவீலரை பேருந்தின் முன்பு நிறுத்தினர். பின் கவியரசன் அவரிடம் வண்டியை எடுக்க சொன்னபோது ரமேஷ் ஆத்திரத்தில் கத்தியால் கவியராசனை தாக்கினார். இந்த சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்த நல்ல பாண்டியன் டூவீலரில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது மாணிக்கம் பிள்ளை சத்திரம் என்ற இடத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது 2 வயது மகள் பிரமிக்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் இருந்து துபாய்க்கு செல்லும் பயணிகளை இன்று டிஆர்ஐ திருச்சி & சிஐயு, அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஸ்ரீ ஹமீத் பாசித் மற்றும் சிங்கப்பூர் செல்லும் ஸ்ரீ முகமது முஸ்தபா ஆகிய இரண்டு பயணிகளின் உடைமையில் ரூ.11,14,556/- & ரூ.12,26,900/- மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர் அருகே நேற்று நடந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாணவர்கள் அனைவரும் உயர் கல்வி பெற வேண்டும் என்றார். சாலப்பட்டியில் உள்ளாட்சி தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் உங்கள் பிள்ளைகளை உயர் கல்வி வரை படிக்க வைக்க வேண்டும். வேலைக்கு அனுப்பக்கூடாது அவர்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்க உயர் கல்வி பயில அனுப்ப வேண்டும் என்றார்.
திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்
திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு சமூகவியல், பொதுநலம், ஆற்றுப்படுத்துதல் துறை ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவதில் ஆற்றல் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.