India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி டி.வி.எஸ். பகுதியைச் சேர்ந்த ரத்தினம் நேற்று காலை நண்பர்களுடன் மைதானத்தில் ஹேண்ட் பால் விளையாடிக் கொண்டிருந்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் வடை மற்றும் போண்டா உள்ளிட்ட தின்பண்டங்களை நண்பர்களுக்கு வாங்கி வந்திருந்தார். அதனை நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்து தின்ற போது ஒரு போண்டாவில் 5 ரூபாய் நாணயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் “கொழும்பு − திருச்சி – கொழும்பு” வான்வழியில் கூடுதல் விமானச்சேவை தற்போது வாரத்திற்கு 7 விமானச்சேவை உள்ள நிலையில், வரும் 31 ஆம் தேதி முதல் வாரத்திற்கு 8 சேவைகள். அதாவது வியாழக்கிழமைகளில் 2 சேவைகள், விரைவில் கூடுதல் சேவைகளை அறிவிக்க உள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு சென்ற திருச்சியை சேர்ந்த கார் உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளானது. இதில் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவரும் வழக்கறிஞருமான சீனிவாசன், தெற்கு மாவட்ட உறையூர் பகுதி தலைவர் கலை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இருந்து சென்ற கார் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கார் கவிழ்ந்ததில் சீனிவாசன், கலை ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி மாநில துணைத் தலைவராக இருந்த ஏ.ஆர்.பாட்ஷா பாஜகவின் தவிர்க்க முடியாத ஒருவராக திகழ்ந்தார். பாஜகவின் மீது அளப்பரிய மதிப்பையும் அன்பையும் உருவாக்கி பல இஸ்லாமிய சகோதரர்களை பாஜகவிற்கு கொண்டு வந்தவர். இவர் இன்று தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மாநில தலைவர் அண்ணாமலைக்கும், திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகருக்கும் அனுப்பியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. SHAREIT
ஒவ்வொரு நாளும் இந்தியாவில் அதிகம்/குறைவான காற்று மாசுடைய நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட காற்று தரக் குறியீட்டில் (ஏ.க்யூ.ஐ.) பட்டியலில் சுத்தமான காற்றுடைய பகுதியாக திருச்சியின் பல்கலை பேரூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதல் 10 நகரங்களில் ராமநாதபுரம், மதுரை ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியலை 100% தூய்மையாக்கும் பணியில் 1.87 லட்சம் வாக்காளா்கள் இரட்டை பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவாகி உள்ளவர்களுக்கு அறிவிப்பு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பை பெற்றவர்கள் வாக்காளா்கள் படிவம் – யு அறிவிப்புடன் தங்களது விவரங்களை இணைத்து வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லூரி, பள்ளி உட்பட 14 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 4,198 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 1,852 பேர் தேர்வு எழுதினர். 2,346 பேர் தேர்வு எழுத வரவில்லை.
திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் சித்திக். இவர் எடமலைப்பட்டி புதுரில் அரவை ஆலை நடத்தி வருகிறார். இவரது ஆலையில், கவிதா என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் கவிதா, மாவு அரைத்துக்கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக அவரது சேலை இயந்திரத்தில் சிக்கி சுழற்றியதில் தலைகுப்புற விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எ.புதூர் போலீசார் விசாரணை செய்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.