India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் 16.11.24, 17.11.24, 23.11.24 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே 2025ஆம் ஆண்டிற்குரிய தகுதியான வாக்காளர்கள் தங்கள் பெயர்களை இதனை பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஷேர் செய்யவும்
திருச்சி மாத்தூர் அடுத்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று 39ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்கவில்லை. பல்கலைக்கழகத்தின் 39 வது பட்டமளிப்பு விழாவில் 520க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆளுநர் பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
புத்தாநத்தம் அடுத்த இடையபட்டியைச் சேர்ந்த தனலட்சுமி இன்று காலை அவரது மகனுடன் டூவீலரில் சென்று கொண்டிருந்த போது பிள்ளையார்கோவில்பட்டி அருகே விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மகன் காயம் அடைந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த புத்தாநத்தம் போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு மின்கலனால் இயங்கும் ஸ்கூட்டர் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் பெற்ற மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் பழுதடைந்து இருப்பின் அதற்கு பதிலாக மீண்டும் புதிய வாகனம் பெற்றிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே, விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHAREIT
திருச்சி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் தீபாவளி அன்று குறைந்த ஒளியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும், மாவட்ட நிர்வாக அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி பட்டாசு வெடிக்க வேண்டும், மேலும், மாசற்ற விபத்து இல்லா தீபாவளியை கொண்டாடுமாறு தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
திருச்சி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் தீபாவளி திருநாளன்று குறைந்த ஒளியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிக்க வேண்டும்.மேலும்,மாசற்ற விபத்து இல்லா தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார்.
தவெக மாநாட்டிற்கு சென்ற திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், கலை ஆகியோர் விபத்தில் உயிரிழந்ததற்கு அக்கட்சி தலைவர் விஜய் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என உயிரிழந்த தெற்கு மாவட்ட துணை தலைவர் கலையின் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இது குறித்து இன்று திருச்சியில் பேசிய அவரது உறவினர்கள் எங்களுக்கு இழப்பீடு தேவையில்லை, இரங்கல் கூட தெரிவிக்காததால் வருத்தமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ (03.11.2024) அன்று திருச்சி – சென்னை மற்றும் புதுக்கோட்டை – சென்னை சிறப்பு இரயில் சேவை வேண்டி, கடந்த (24.10.2024) அன்று, திருச்சி மற்றும் மதுரை இரயில்வே கோட்ட மேலாளருக்கும், தென்னக இரயில்வே பொது மேலாளருக்கும் கோரிக்கை வைத்தார். முதற்கட்டமாக, திருச்சி- புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் சிறப்பு இரயில்களின் அட்டவணையை தெற்கு இரயில்வே இன்று வெளியிட்டுள்ளது.
கருங்குளத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜோஸ்வா தாமஸ். இவர் இன்று கல்லூரிக்கு செல்ல வையம்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறும் போது நடைபாதைக்கும் ரயிலுக்கும் இடையில் கால் சிக்கி பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மாணவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் வருகின்ற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், சொந்த ஊருக்கு செல்வோர் காரணமாக ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் திருச்சி ரயில் நிலையங்களில் தமிழக ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் இணைந்து திருட்டு உள்ளிட்ட குற்றத் தடுப்புப் பணிகளுக்காக சுழற்சி முறையில் 24 மணி நேர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.