Tiruchirappalli

News October 31, 2024

பெல் நிறுவன வேலை வாய்ப்பு அறிவிப்பு

image

பெல் நிறுவனத்தில் 77காலியிடங்களுக்கு டிரைய்னி இன்ஜினியர் வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., மற்றும் வயது வரம்பு டிரைய்னிக்கு 28, இன்ஜினியருக்கு32
(1.9.2024ன்படி) ஆகும். மேலும் இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 9.11.2024 மற்ற விவரங்களுக்கு bel-india.in என்ற இணைய தள முகவரியில் பெறலாம் எனபெல் நிறுவன மேலாளர் இன்று தெரிவித்துள்ளார்.

News October 30, 2024

ஸ்தம்பித்த திருச்சி கடைவீதி 

image

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் தீபாவளிக்கு தேவையான பொருட்கள் மற்றும் புத்தாடைகளை வாங்க திருச்சி என்.எஸ்.பி ரோடு, சிங்காரத்தோப்பு, சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மக்கள் குவிந்தனர். காலை முதலே கடுமையான கூட்டம் இருந்து வந்த நிலையில், தற்போது மக்களின் வரத்து அதிகமாகி கடைவீதி பகுதிகளே ஸ்தம்பித்துள்ளது.

News October 30, 2024

திருச்சியில் நாளை மழை வெளுக்கும்

image

தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தீபாவளியான நாளை திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்

News October 30, 2024

திருச்சியில் அமைச்சர் நேரு மரியாதை

image

திருச்சியில் சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவர், தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் கலந்து கொண்டனர்.

News October 30, 2024

தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க எஸ்பி அறிக்கை

image

திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது பகுதிகளில் சந்தேகப்படும் படியான நபர்களை மக்கள் பார்த்தால் உடனடியாக மாவட்ட காவல் அலுவலக உதவி மையத்தில் உள்ள 9487464651 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தீபாவளி பண்டிகைக்காக வெளியூருக்கு சென்றால் மேற்கண்ட எண்ணிற்கு தகவல் அனுப்பி பயன்பெற கேட்டுக் கொண்டார். SHAREIT

News October 29, 2024

திருச்சிக்கு கூடுதல் விமான சேவை-31ம் தேதி முதல் துவக்கம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி – இலங்கைக்கு கூடுதலாக ஒரு விமான சேவை இயக்கப்பட போவதாக இன்று ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வாரத்துக்கு 7 சேவை என்று இருந்த நிலையில், ஒரு சேவை கூடுதலாக்கி, வாரத்துக்கு 8 சேவையாக அதிகரித்துள்ளது. இந்த கூடுதல் சேவை விமானம் தீபாவளி பண்டிகையன்று அக்டோபர் 31ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

News October 29, 2024

திருச்சி: 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி துவக்கம்

image

திருச்சியில் 30.10.24ம் தேதி முதல் கால்நடைப்பராமரிப்பு துறையினரால் 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி தொடங்கப்படுகிறது. இந்தப் பணியினை மேற்கொள்ள திருச்சியில் 264 கால்நடை கணக்கெடுப்பாளர்களுக்கும், 52 மேற்பார்வையாளர்களுக்கும் நேர்முகப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கணக்கெடுப்பாளர்கள் உங்கள் பகுதியில் விவரங்கள் சேகரிக்க வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

திருச்சி: மனைவியை கத்தியால் குத்திய கணவன்

image

கருமண்டபத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் தனியார் ஊழியர். இவரது மனைவி நந்தினி ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே நேற்று ஏற்பட்ட தகராறில் ஆரோக்கியதாஸ் நந்தினியை கத்தியால் குத்தியுள்ளார். படுகாயம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 29, 2024

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் மனு அளித்த முனைவர்

image

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று ஆளுநர் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கு நிறைய பிரச்சனைகள் இருப்பதாக கூறி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் முனைவர் பட்டம் பெற்ற இன்பராஜ் என்பவர் ஆளுநரிடம் மனு அளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News October 29, 2024

திருச்சியில் செயல்படும் இல்லங்களுக்கான பதிவு

image

திருச்சியில் குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லம், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான இல்லங்கள் போன்றவை செயல்படுகிறது. இந்த இல்லங்கள் அனைத்தும் உரிமம் பெரும் சட்டங்களின்படி பதிவு செய்யப்பட வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு இன்று முதல் ஒரு மாத காலத்திற்குள் உரிமம் பெற்றுக்கொள்ள மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!