Tiruchirappalli

News November 19, 2024

திருச்சி: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாதாந்திர உதவித்தொகை ரூ.2000 பெற விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் பயனடைய விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்று திறனாளி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் <>https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 19, 2024

அரியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 சிறுவர்கள்

image

திருச்சி அரியமங்கலம் போலீசார் நேற்று ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 17 வயது சிறுவர்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர், அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சிறுவர்களை கைது செய்தனர். பின்னர், 2 சிறுவர்களையும் இன்று ஜாமீனில் விடுவித்தனர்.

News November 19, 2024

திருச்சியில் இருந்து ஆரம்பித்தால் வெற்றி தான்: அமைச்சர் பேச்சு

image

திருச்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கே.என். நேரு இன்று பேசியது, தமிழக முதல்வர் மீதும், இந்த ஆட்சி மீதும் குறை சொல்லி அடுத்து நாங்க தான் என எதிர் கட்சி தலைவர்கள், அதிமுகவினர் நிறைய பேர் பேசுகின்றனர். ஆனால், தமிழக முதல்வராக ஸ்டாலின் தான் வருவார். இன்று யார்! யாரோ? நம்மை வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. திருச்சியில் இருந்து ஆரம்பித்தால் எதுவுமே வெற்றி தான் என்றார்.

News November 19, 2024

வருத்தம் தெரிவித்த முன்னாள் அமைச்சர்

image

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கள ஆய்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தங்கமணி அதிமுக நிர்வாகிகள் பொறுமையாக இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது எனவும், இதனால் தான் நாம் வெற்றியை இழந்து விட்டோம் என தெரிவித்தார்.

News November 19, 2024

திருச்சியில் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு

image

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் செயல்வீரர் கூட்டம் இன்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News November 19, 2024

சிறுகனூர் அருகே விவசாயி பலி

image

பாலையூரை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (36). இவர் தத்தமங்கலத்திலிருந்து பாலையூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சாலையின் குறுக்கே மயில் வந்ததால், அதன் மீது வாகனம் மோதாமல் இருக்க பிரேக் பிடித்தார். அப்போது ராஜீவ் காந்தி நிலை தடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 19, 2024

கல்வி உதவித்தொகை பெற ஆட்சியர் அழைப்பு

image

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான என்ஐடி மற்றும் ஐஐடியில், பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான மாணவர்கள் திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News November 18, 2024

திருச்சி மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அறிவிப்பு

image

திருச்சியில் நடப்பு 2024-2025ஆம் ஆண்டு நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கான பயிர் காப்பீட்டுத் தொகை ஒரு டிக்கருக்கு ரூ.566-ஐ உடனடியாக பொது சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு ரபி பருவத்திற்கு ஷீமா காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

News November 18, 2024

அம்பேத்கர் விருது பெற ஆட்சியர் அழைப்பு

image

ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், 2024ம் ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் விருது” 2025-ஆம் ஆண்டில் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற விண்ணப்பிக்க விரும்புவோர், உரிய படிவத்தினை திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News November 18, 2024

திருச்சி: மக்களிடம் இருந்து பெறப்பட்ட 686 மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மனு அளித்தனர். இதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றுதல், ஜாதி சான்றுகள், இதர சான்று, கல்வி உதவித்தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களிடமிருந்து 686 மனுக்கள் பெறப்பட்டன.

error: Content is protected !!