India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமான மூலம் தஞ்சாவூரை சேர்ந்த அண்ணாமலை என்ற நபர் வருகை தந்தார். அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் வந்த பாஸ்போர்ட் தவறான தகவலின் அடிப்படையில் பெறப்பட்ட போலியானவை என தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம் சார்பில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் டைடல் பார்க் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் திருச்சியில் சுமார் 14.16 ஏக்கர் பரப்பளவில், 93,000 சதுரடியில், ரூ.415 கோடி செலவில் டைடல் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி டைடல் நிறுவனமானது விண்ணப்பித்துள்ளது. இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் 6,000 பேருக்கு ஐ.டி வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி என்.எஸ்.பி ரோட்டில் பிரபல தனியார் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சுகன்யா, கார்த்திக், அனார்கலி ஆகிய 3 பேர் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், நேற்று 5 பவுன் தங்க நகைகளை இந்த 3 பேரும் கூட்டு சேர்ந்து திருடியுள்ளனர். இதனை கண்டுபிடித்த மேலாளர் பிரசன்னகுமார், இது குறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளவுத்துறை தந்த தகவலின் அடிப்படையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து நேற்று கொழும்பு செல்லவிருந்த பயணி ஒருவரை, சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது அவரது உடைமையில் 4.36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8,000 ஆஸ்திரேலிய டாலர் வெளிநாட்டு பணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொட்டியம் கணேசபுரத்தில் நேற்று தங்கவேல் என்பவர் தான் வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொல்லை தாங்க முடியாமல் நேற்று வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் அளித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருச்சி காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மூழ்கிய பள்ளி மாணவர்களில் 3 பேரில் ஒரு மாணவரின் உடல் காலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மாலை 4 மணி அளவில் சிம்பு என்ற மாணவரின் உடலும் மீட்கப்பட்டது. மூன்றாவது நபரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், தற்போது மூன்றாவதாக விக்னேஷ் என்பவரின் உடலும் மீட்கப்பட்டது. இது திருச்சி மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 30ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இதில் சிறந்த பயிற்றுநர்கள் கொண்டு அனைத்து பாடப்பகுதிகளுக்கும் பயிற்சி அளிப்பதுடன், மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 68 லட்சத்து 63 ஆயிரத்து 486 ரொக்கமும்,1 கிலோ 395 கிராம் தங்கமும், 2 கிலோ 710 கிராம் வெள்ளியும், 96 அயல்நாட்டு ரூபாய் நோட்டுகளும், 436அயல் நாட்டு நாணயங்களும் கிடைக்க பெற்றதாக கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் தெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 27ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 94990 55901 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்
மருங்காபுரி வட்டம் வேம்பனூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்துகொண்டு, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 504 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடியே 36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.