India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய குடியரசுத் தலைவர் வருகிற 30ஆம் தேதி திருச்சி வருகிறார். இங்கிருந்து திருவாரூர் பல்கலைக்கழகம் சென்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, பின்னர் ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கி ஸ்ரீரங்கம் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்ய இருந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் நிகழ்வு ரத்தாகி உள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக திருச்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது.இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க
திருச்சி மணிகண்டம் உட்பட 7 பிரபலமான குளிர்பான பாட்டில்கள் தொழிற்சாலைகளில் இன்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பிரபல நிறுவனத்தின் பெயர்களை பாட்டில்களில் ஒட்டி விற்பனை செய்த 12,370 குளிர்பானம் நிரப்பப்பட்ட பாட்டில்கள், 3698 காலி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த 7 தொழிற்சாலைகளிலும் உள்ள உணவு மாதிரிகள் பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
திருச்சி ஆட்சியர்அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.இலவச மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக மின்இணைப்பு வழங்கவும், தேர்தலின்போது அறிவித்தபடி மாதம்தோறும் மின்கணக்கீடு செய்யவேண்டும் மேலும் கரும்பு, மக்காச்சோளம் மற்றும் நெல்லுக்கு லாபகரமான உரிய விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்யவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மணப்பாறை கண்ணுடையான் பட்டி பகுதியைச் சேர்ந்த நல்ல பாண்டியன் ( 27) மனைவி செல்சியா (25). இவர்களுக்கு 2 வயது பெண் குழந்தை பிரிமிகா உள்ளார். பாண்டியன் தனது மகள் பிரிமிகாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது குறுக்கே நாய் வந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில், பிரிமியா தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை – திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் களமாவூர் டோல்கேட் அருகில் பிஎல்ஏ என்ற தனியார் பேருந்து லாரி மீது மோதியதில் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்தப் பேருந்தில் பயணித்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருச்சி மேற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு உடல்நலக்குறைவால் சற்றுமுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் காய்ச்சல் காரணமாக அமைச்சர் நேரு சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஷேர் செய்யவும்
தச்சங்குறிச்சியை சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வந்துள்ளார் . இந்நிலையில் நேற்று பள்ளியில் நடந்த அணி வகுப்பில் பங்கேற்ற பிறகு, வகுப்பறைக்கு சென்ற வெற்றிவேலன் திடீரென மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காணக்கிளியநல்லூா் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.26) நடைபெறவிருந்த இளநிலைப் மற்றும் முதுநிலைப் பருவ எழுத்துத்தேர்வுகள் அனைத்தும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் மறு அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றுதல், முதியோர் உதவித்தொகை, குழந்தைகள் நலத்திட்ட உதவிகள், ஜாதி சான்றுகள், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திரளான மக்கள் மனு அளித்தனர். இதில் மொத்தம் 714 மனுக்கள் இன்று பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.