India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீஸ் எஸ்.ஐ தீபிகா தலைமையிலான போலீசார் திருவானைக்காவல் நேரு தெரு, திருவரங்கம் சாத்தார வீதி, பூ மார்க்கெட், மேலூர் அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கஞ்சா விற்றதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட ஐந்து ஆரம்ப தபால் நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை, கும்பகோணம், திருவாரூர், திண்டிவனம், கரூர் பகுதிகளில் இயங்கக்கூடிய ஆரம்ப தபால் நிலையங்களில் தலா ஒன்றை டிச.7ஆம் தேதியோடு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தபால் நிலையங்களில் பணியாற்றக் கூடியவர்கள் வேறு தபால் நிலையங்களில் மாற்றப் பணியில் அமர்த்தப்படுவர்.
திருச்சி ஏர்போர்ட் பகுதியில் போலி நிறுவனம் நடத்தி அதன் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் பத்மா மற்றும் கணேசன் என்ற இருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டவர்களையே மிரட்டி, ஆதாரங்களை அழித்த மேற்கண்ட இரு வரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்த பிரான்சிஸ் என்ற வாலிபர் நேற்று டூவீலரில் சென்று கொண்டிருந்த போது இடைமறித்த ஸ்டாலின் என்ற நபர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதுகுறித்து பிரான்சிஸ் உடன் வந்த நபர் அவ்வழியே சென்ற மணப்பாறை போக்குவரத்து ஆய்வாளரை வழிமறித்து கூறிய நிலையில் ஸ்டாலினை மடக்கி பிடித்து ஜீயபுரம் சட்ட ஒழுங்கு போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் பொதுமக்கள் ஆய்வாளரை பாராட்டி வருகின்றனர்.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.29) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் செய்யவும்
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 30ஆம் தேதி வருகை தர உள்ளார். இவரின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணம் கருதி நாளை 29ஆம் தேதி முதல் 30ஆம் தேதி இரவு 12 மணி வரை குடியரசு தலைவர் பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று கோலாலம்பூரில் இருந்து பயணித்த ஆண் பயணி ஒருவரை சோதனை செய்தனர். அப்போது அவர் வாட்டர் டேப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.13,69,800/- மதிப்புள்ள 180 கிராம் மதிப்புள்ள 24 காரட் தூய்மையான, சுத்திகரிக்கப்பட்ட நான்கு உருண்டை வடிவ தங்கத் துண்டுகளை பறிமுதல் செய்தனர்.
மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவராக விக்னேஷ்வரன் பதவி வகித்தார். இவர் பொதுமக்களிடமிருந்து பெற்ற வரிகளை மோசடி செய்ததால் பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் கீழ், அவர் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக விக்னேஸ்வரன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதியின் உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நேற்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தொட்டியம் அடுத்த ஏழூர்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த இளையராஜா மகன், ஏழூர்பட்டி அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மற்றொரு மாணவன் விடைத்தாளும், இவரின் விடைத்தாளும் ஒரே மாதிரியாக இருந்ததாக கூறி ஆசிரியர் அசோக்குமார் மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்த கருத்துக்களை கமெண்ட் செய்யவும்
அரியமங்கலம் எஸ்.ஐ.டியில் வருகின்ற (30-11-24) அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களுக்கு ஆட்கள் தேர்தெடுக்கப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 0431-2413510/94990 55901/94990 55902 அழைக்கலாம்.
Sorry, no posts matched your criteria.