India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் இன்று வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் வங்கதேச இந்துக்கள் புறக்கணிப்பு செய்யப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரில் பல நாடுகளுக்கிடையே ஆசிய பசிபிக் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி திருவெறும்பூர் பாலாஜி நகரைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் சண்டை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். அவருக்கு அவரது குடும்பத்தாரும், பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீரங்கம் வாழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் செயல்பாட்டினை இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பார்வையிட்டார். மேலும் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் அந்தநல்லூர் ஒன்றிய குழுத்தலைவர் துரைராஜ், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புனித ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் 15-12-24 அன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்குபெற தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 8248470862 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காவல் வாகனங்கள் வருகின்ற (10.12.2024) அன்று ஏலம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு ஏலம் எடுக்க தங்களது ஆதார் அட்டையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 5000/- மற்றும் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 2000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டுமென திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் தெரிவித்துள்ளார்.
உப்பிலியபுரம் அடுத்துள்ள புடலாத்தி கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன். இவரிடம் டிரைவராக ஒக்கரையை சேர்ந்த பழனிச்சாமி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், வரதராஜன் கார் ஓட்டு கற்றுக் கொள்ள வேண்டும் என்று பழனிச்சாமியிடம் கூறியதை தொடர்ந்து வெங்கடாசலபுரம் பகுதியில் கார் ஓட்ட பழகிக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக கார் அருகில் இருந்த கிணற்றில் சீறிப்பாய்ந்தது. இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை மாவட்ட சுகாதார துறை மூலம் நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு திருச்சி மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 0431-2333112 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி தாளாளரும், முன்னால் தமிழக முதல்வர் மறைந்த கலைஞரின் செயலாளர் ராமன்I.A.S இன்று உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவரும், தமிழக முதல் வருமான மு க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கல்லூரி முன்னாள் பேராசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்.
ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
திருச்சி கோட்டை போலீசார் இன்று மேலபுலிவார்டு சாலை, நடுகுஜிலி தெரு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை விசாரித்ததில், அவர்கள் இருவரும் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் பிரவீன் கார்த்தி, விக்னேஸ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் ரவுடிகள் என்பது தெரியவந்தது.
Sorry, no posts matched your criteria.