India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி ஜீவா நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த முத்துக்குமாரிடம் இதுகுறித்து கேட்டு கண்டித்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த முத்துக்குமார் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் பென்ஷன் பணம் வாங்க சென்ற கல்யாணி என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்று (டிச.10) தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ஹாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், கல்யாணியிடம் நகைகளை பறித்து விட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்து சாக்கு பையில் கட்டி அவரை வீசியது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் வேலைக்காக சென்னை போன்ற விமான நிலையங்களுக்கு சென்று, மஸ்கட் செல்ல வேண்டியுள்ளது.இந்நிலையில் ஏற்கனவே திருச்சி – மஸ்கட் இடையே புதன்கிழமை மட்டும் நேரடி விமான சேவையை வழங்கி வந்த ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனம் கூடுதல் விமான சேவையை, ஜனவரி 6ம் தேதி, துவங்க உள்ளது.
திருச்சி விமான நிலையத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை வருகை புரிந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் 2025 ஆம் ஆண்டு திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட இருக்கின்றேன். அமைச்சர்கள் செய்யும் அக்கப்போர்களை பொதுமக்களிடம் தெரிவிக்க இருக்கின்றேன். மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக கபட நாடகம் ஆடுகிறது என தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது திரளான பாஜகவினர் பங்கேற்றனர்.
மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கல்யாணி (வயது 70) கணவர் ரயில்வே ஓய்வு பெற்று இறந்து விட்டார். இவரது பென்ஷன் பெற்று கல்யாணி வாழ்க்கை நடத்தி வந்தார். திருச்சியில் பென்சன் பணத்தை எடுத்துக்கொண்டு கூறிவிட்டு சென்ற கல்யாணி சிங்காரத்தோப்பு சூப்பர் பஜாரில் காயங்களுடன் இறந்து கிடந்தார். மூதாட்டி கொலை செய்தது யார் என்று கோட்டை போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி பொன்மலையில் ரயில்வே ஒர்க் ஷாப்பில் ரயிலின் உதிரி பாகங்கள் இன்ஜின்கள் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு ஊட்டி மலை ரயில் என்ஜின் தயாரிக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து நேற்று மாலை இன்ஜினானது சரக்கு லாரி மூலம் ஊட்டிக்கு புறப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி வரும் 11ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி தமிழ்நாடு ஹோட்டலில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் தலைவர் பொன்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு சொத்துவரி உயர்த்தப்பட வேண்டும், அதிமுக ஆட்சியில் உயர்த்தப்படாததால் தற்போது ஒன்றிய அரசு திமுக அரசிற்கு சொத்து வரியை உயர்த்த வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருவதாக கட்டுமான தொழில் தலைவர் பொன் குமார் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்த அறிவழகன் (34), நேற்று அங்குள்ள தாவடி குளத்தில் மீன்பிடிப்பதற்காக இறங்கியுள்ளார். ஆழம் அதிகமாக இருந்ததால் தண்ணீரில் மூழ்கினார். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அறிவழகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
திருச்சி மாவட்டம் சிறுகமணி, பெட்டவாய்த்தலை, கே.சாத்தனூர் மணிகண்டம், துணைமின் நிலையங்களில் நாளை (டிச.10) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பழங்காவேரி, அந்தநல்லூர், கொடியாலம், சிறுமணி, திருப்பராய்த்துறை, இளமனூர், பெருகமணி, காவக்கர்பாளையம், தளபதி, காமநாயக்கபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மணி மாலை 4 வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.