India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூரை சேர்ந்த இப்ராம்ஷா (50), இராமநாதபுரத்தை சேர்ந்த சுக்ரீவன் (54), ஆதம் மாலிக் (55) ஆகியோரை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தபோது, குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில் போலி கடவுச்சீட்டில் பயணித்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த திருச்சி விமான நிலையப் போலீசார் வழக்குப் பதிந்து, மேற்குறிப்பிட்ட மூவரையும் கைது செய்தனர்.
மண்ணச்சநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் இன்று ரூ.2 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இருசக்கர வாகனம் மற்றும் 2 செம்மர கட்டைகளை மண்ணச்சநல்லூர் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்மலை ரயில்வே பணிமனையில் உற்பத்தித் திறனை மேம்படுத்தி பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாகவும், செயல் திறனை மேம்படுத்தி செலவுகளை குறைத்ததற்காகவும், பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரியும் மூத்த பொறியாளர் டி.எம்.கோபால கிருஷ்ணனுக்கு இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் நேற்று விருது வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில் ரயில்வே உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி காவல் சரகத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பணிபுரியும் காவலர்கள், முதல் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் வரை உள்ள அதிகாரிகள் உள்ளிட்ட 93 நபர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திக்கேயன் நேற்று நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்வில் காவல் சரகத் துணைத் தலைவர் மனோகர் மற்றும் 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டும் நிகழ்வு பல ஆண்டுகளாக நடைபெறுகிறது, தொர்ந்து நாம் கட்சியை சார்ந்தவர்கள் அதனை தடுத்து வருகின்றனர். மேலும் குப்பைகள் எவ்வாறு சோதனை சாவடியை தாண்டி வருகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி டிச.24 & 31 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்படும் ரயில்கள் (06039/06040) விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு நண்பகல் 12.15 மணிக்கு சென்றடையும். செய்தியை பகிரவும்!
இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் இயக்கியதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ரயில்வே வார விழா கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாட்டின் 69 ஆவது ரயில்வே வாரவிழாவை முன்னிட்டு சிறந்த ரயில்வே பணிமனையாக பொன்மலை ரயில்வே பணிமனை தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனால் பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலை பார்த்து வரும் ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளனி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் இன்று மணப்பாறை சிப்காட் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், யுடிஎஸ் கைப்பேசி செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளுக்கு, 3 சதவீத தொகை திரும்ப பெறும் திட்டம் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இதனை பயணிகள் தங்களுடைய வீடுகளில் இருந்தோ அல்லது பயணத்தின் போதோ பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
செம்மை நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள் திரு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்திக்கான விருது பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதில் கலந்து கொள்ளும் விவசாயிகள் குறைந்தபட்சம் 2 ஏக்கர் விவசாய நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகையாவோ வைத்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனரை அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.