India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 68 லட்சத்து 63 ஆயிரத்து 486 ரொக்கமும்,1 கிலோ 395 கிராம் தங்கமும், 2 கிலோ 710 கிராம் வெள்ளியும், 96 அயல்நாட்டு ரூபாய் நோட்டுகளும், 436அயல் நாட்டு நாணயங்களும் கிடைக்க பெற்றதாக கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் தெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 27ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 94990 55901 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்
மருங்காபுரி வட்டம் வேம்பனூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்துகொண்டு, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 504 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடியே 36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரிகளை,”மொபைல் லாட்டரி” என்ற பெயரில் நூதன முறையில் திருச்சி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து, தினமும் பல லட்ச ரூபாய் பணத்தை சம்பாதித்த, திருச்சியை சேர்ந்த தொழிலதிபர்கள் எஸ்விஆர் மனோகரன், எஸ்என்ஆர் ரங்கராஜன் மற்றும் பெரியண்ணன் ஆகியோரை இன்று கோட்டை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த திருச்சி எம்பி துரை வைகோ பேசுவையில், திமுக கூட்டணி, 200 தொகுப்புகளில் வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்து சரியானது. 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது, அவரது கட்சிக்காக (பாஜக) இருக்கும் என அவர் தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு திருச்சி வழியாக தாம்பரம், கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 31 அதிகாலை 12.35க்கு தாம்பரத்தில் புறப்பட்டு காலை 5.15க்கு திருச்சி வந்தடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோன்று மறு மார்க்கத்தில் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ஷேர் செய்யவும்
தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் கம்போடியா, தாய்லாந்து, மியன்மார் போன்ற நாடுகளில் வேலைக்கு அதிக சம்பளம் என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு மோசடியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, வெளிநாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் தமிழக அரசு அயலாக தமிழர் நலத்துறை கட்டணமில்லா 24 மணி நேரம் அழைப்பு உதவி மையத்தின் 8069009901 எண்னை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
மதுரையைச் சேர்ந்தவர் வட்ட சூரியா. இவர் திருச்சியில் ஒரு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று சிறையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது வட்ட சூர்யாவிடம் கஞ்சா இருந்தது தெரிந்து. அவரிடம் விசாரித்ததில் சிறை வார்டன் எழில்ராஜிடம் வாங்கியதாக கூறினார். பிறகு, சிறைவார்டன் எழில்ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து நேரடியாக மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்று அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பயனாளிகளுக்கு உறுதியளித்தார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உள்நாட்டு சேவையான மும்பையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படும் இண்டிகோ விமானத்தின் பயண கட்டணம் கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு பன்மடங்கு உயர்ந்திருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மும்பையில் இருந்து திருச்சிக்கு ரூ.19,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.