Tiruchirappalli

News December 31, 2024

ஜன.10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

image

திருச்சி மாவட்ட ஆட்சியர்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் நடைபெற உள்ள ஏகாதேசி திருவிழாவின்,முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நாளான 10ஆம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையானது பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் பொருந்தாது.இந்த விடுமுறையை ஈடு செய்ய 25.01.25ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றார்.

News December 30, 2024

புத்தாண்டு: வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு

image

திருச்சி மாவட்ட வன அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:ஸ்ரீரங்கம் வட்டம்,மேலூரில் இயங்கும் வண்ணத்துப்பூச்சி பூங்கா புத்தாண்டு விடுமுறையை ஒட்டி,பார்வையாளர்களுக்காக வரும் 31ம் தேதி செவ்வாய்க்கிழமை திறக்கப்படும். எனவே பொதுமக்கள், குடும்பத்தினருடன் வருகை தந்து மகிழ்ச்சியாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 30, 2024

மாவட்ட ஆட்சியரிடம் குவிந்த மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 438 மனுக்கள் வருகை தந்தது.இதில்,இலவச வீட்டு மனை பட்டா,பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ்,இதர சான்றுகள்,குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அரசின் நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.

News December 30, 2024

ஆட்சியரை சந்தித்த மாணவர்கள் – காரணம் என்ன?

image

 மண்ணச்சநல்லூர் வட்டம் இருங்களூர் முல்லை நகர் பகுதியில் பள்ளிச் செல்லும் குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கையை முன்வைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சீருடை உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை வழங்கினர்.

News December 30, 2024

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது

image

புத்தாநத்தம் காவல் நிலைய எஸ்ஐ விஜயாலயன் தலைமையிலான குழுவினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெருமாம்பட்டி பகுதியில் 7 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

News December 30, 2024

சாலை விபத்தில் தம்பதி படுகாயம்

image

மணப்பாறையை அடுத்த கருப்பூரை சேர்ந்த தம்பதியினர் இன்று சொந்த அலுவல் காரணமாக காரில் புத்தாநத்தம் அருகே சென்றனர். அப்போது கார் நிலைதடுமாறி பக்கத்தில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தம்பதியினருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர், இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தினர்.

News December 30, 2024

அயிலக வாழ்தமிழ் மாணவர்களுடன் ஆட்சியர் 

image

அயல்நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின், குழந்தைகள், மாணவர்கள், தாய் திருநாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வகையில், “வேர்களை தேடி” என்னும் திட்டத்தின் கீழ் இன்று திருச்சிக்கு வருகை தந்த அயிலக வாழ்தமிழ் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர், மணப்பாறை எம்எல்ஏ கலந்து கொண்டனர்.

News December 30, 2024

திருச்சி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி நியமனம்

image

தமிழகம் முழுவதும் 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னையில் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்த செல்வ நாகரத்தினம், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் திருச்சி மாவட்ட எஸ்.பி-யாக இருந்த வருண்குமார் டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

News December 30, 2024

2,500 காவலர்கள் பாதுகாப்பு பணி: கமிஷனர்

image

திருச்சி காவல் ஆணையர் காமினி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவிற்கு கடந்த வருடம் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்தார்கள். இந்த வருடம் 3 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவிற்கு பாதுகாப்பு அளிக்க உள்ளூர் மற்றும் வெளியூர் காவல் அதிகாரிகள் சுமார் 2,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

News December 30, 2024

திருச்சி டிஐஜியாக வருண்குமார் ஐபிஎஸ் நியமனம்

image

தமிழகத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நேற்று பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவரும், சமூக விரோத கும்பலை சுற்றி வளைத்து அவ்வப்போது ரெய்டு நடத்தியவருமான வருண் குமார் ஐபிஎஸ் திருச்சி டிஐஜி ஆக பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!