India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஏப்.4) திடீர் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக புள்ளம்பாடி பகுதியில் 18.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் நந்தியார் அணை பகுதியில் 18.2 மி.மீ, கொப்பம்பட்டி பகுதியில் 17 மி.மீ, துறையூர் பகுதியில் 15 மி.மீ என மாவட்டம் முழுவதும் 100.2 மில்லி மீட்டரும், சராசரியாக 4.18 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையம் தனது வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத வகையில், 2025 – 26 நிதியாண்டில் 22 லட்சம் பயணிகளை கையாண்டு ஒரு மிகப்பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது. கடந்த 2024 – 25 நிதியாண்டில் 19 லட்சம் பயணிகள் பயணம் செய்தது முந்தைய சாதனையாக இருந்தது. பின்னர் புதிய ஒருங்கிணைந்த முனையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக விமான நிலைய இயக்குனர் ராஜு தெரிவித்துள்ளார்.

திருச்சி சர்வதேச விமான நிலையம் தனது வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத வகையில், 2025 – 26 நிதியாண்டில் 22 லட்சம் பயணிகளை கையாண்டு ஒரு மிகப்பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது. கடந்த 2024 – 25 நிதியாண்டில் 19 லட்சம் பயணிகள் பயணம் செய்தது முந்தைய சாதனையாக இருந்தது. பின்னர் புதிய ஒருங்கிணைந்த முனையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக விமான நிலைய இயக்குனர் ராஜு தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச்.30 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று(ஏப்.4) மாலை வரை தேசியக் கட்சி, மாநில கட்சி, சுயேட்சை என ஆண்கள் 63, பெண்கள் 6 என மொத்தம் 69 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

மணப்பாறை அருகே மணப்பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த துர்கா(17), முதலாமாண்டு பி.டெக் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்தி வந்ததை, அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் விரைவு ரயிலில் இருப்புப் பாதை போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, பொதுப் பெட்டியில் கேட்பாரற்றுக்கு கிடந்த சூட்கேஸை சோதனையிட்டதில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ கஞ்சா போதைபொருள் இருந்தது தெரிய வந்தது. இதனையெடுத்து அதனை பறிமுதல் செய்து நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம், அம்மாபேட்டை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் காந்தி என்கிற அழகப்பன். திமுக நிர்வாகியான இவரது வீட்டில் லட்சக்கணக்கில் பணம் வைத்திருப்பதாக, தேர்தல் பறக்கும்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையெடுத்து, வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை மேற்கொண்டதில் காந்தி மற்றும் அவரது மகன் வீடுகளில் இருந்த ரூ.11 லட்சம் பறிமுதல் செய்ப்பட்டது.
Sorry, no posts matched your criteria.