Tiruchirappalli

News January 6, 2025

திருச்சி: பொங்கல் விழாவில் அமைச்சர்

image

 துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் 47வது நிகழ்ச்சியாக மாவட்ட மற்றும் கிழக்கு மாநகர கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா காட்டூர் பகுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புது பானையில் பொங்கலுக்கு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

News January 5, 2025

தம்மாமிற்கான நேரடி விமான சேவை துவங்கியது

image

திருச்சியில் இருந்து சவுதியின் தம்மாமிற்கான நேரடி விமான சேவை இன்று முதல் துவங்கியது. திருச்சியிலிருந்து தம்மாமிற்கான நேரடி விமானம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன்று புறப்பட்டு, சவுதி உள்ளுர் நேரப்படி காலை 08:55க்கு தம்மாம் கிங் ஃபஹத் விமான நிலையத்தில் தரையிறங்கும். மீண்டும் காலை 10:10க்கு புறப்பட்டு இந்திய நேரம் மாலை 05:40க்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும் என விமான நிலைய அதிகாரி அறிவித்துள்ளார்.

News January 5, 2025

திருச்சியில் கிடுகிடுவென அதிகரித்த மக்கள்தொகை

image

தமிழ்நாடு புவியியல் துறை 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி மக்கள்தொகை அதிகமாக உள்ள மாவட்டங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்ட மக்கள்தொகை 28.8 லட்சமாக உயர்ந்து, தமிழக அளவில் 5 ஆம் இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் திருச்சியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஷேர் செய்யவும்

News January 5, 2025

லாட்டரி பரிசுத்தொகையை கேட்டவருக்கு தாக்குதல்

image

திருச்சி கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல்குமார். இவர் பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர்களிடம் லாட்டரி சீட்டை வாங்கி உள்ளார்.அந்த சீட்டிற்கு பரிசு தொகை ரூ.8000 நேற்று கிடைத்துள்ளது. அந்த பணத்தை ஜெயவேல் கேட்டபோது, குணசேகரன், மாதவ், யாவின்ராஜ் ஆகியோர் பணத்தை தர மறுத்து விட்டனர். மேலும்,அவரை தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஜெயவேல் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

News January 5, 2025

பாஜகவை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்: டிடிவி தினகரன்

image

திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி தன் சுயநலத்திற்காக வணிகரீதியாக பயன்படுத்தி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி திருந்துவார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழக மக்கள் பா.ஜ.க.வை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். தமிழகத்தில் பா.ஜ.க.வும் வளர்ந்து வருகிறது எனத் தெரிவித்தார்.

News January 5, 2025

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜன.6) மணிகண்டம், அளுந்தூர், பெட்டவாய்த்தலை, திருச்சி மெயின் கார்டுகேட் துணை, கம்பரசம்பேட்டை ஆகிய 5 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறப்படும் பகுதிகளில் நாளை (திங்கள்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியை பகிரவும்!

News January 4, 2025

திருச்சி மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு

image

கம்பரசம் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி (06.01.2025) அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் (07.01.2025) அன்று இருக்காதென மாநகராட்சி ஆணையர் இன்று கூறியுள்ளார்.

News January 4, 2025

அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற திருச்சி ஆணழகன்

image

திருச்சியில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் கோப்பையுடன் தமிழ்நாடு நிர்வாகம் மற்றும் நகராட்சி துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேருவை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். உடன் பஜார் மைதீன் மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் ஒன்றிய கழக பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News January 4, 2025

திருச்சி விமான நிலையத்தில் எம்பி துரை வைகோ பேட்டி

image

விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், அமீரக நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களிடம் அத்துமீறல் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள், அதிகமாக பயணம் செய்பவர்களை தனியாக தடுத்தும், அத்துமீறல் செய்வது மனக்கசப்பை ஏற்படுத்தும். பேசும் பொருளாக உள்ளது. எனக்கும் கெட்ட பெயரை உருவாக்கும். இது அறிக்கை கேட்டுள்ளேன் என தெரிவித்தார்

News January 4, 2025

துப்பாக்கியுடன் போதை மாத்திரைகளை விற்ற 3 பேர் கைது

image

திருவெறும்பூர் அருகே தனியார் மதுபான பார் பின்புறம் நாட்டு துப்பாக்கியுடன் போதை மாத்திரைகளை விற்பனை செய்த காட்டூர் கோபால், அண்ணா நகர் முத்துப்பாண்டி, ஜோதிபுரம் ராஜா முகமது ஆகிய மூன்று பேரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கி, போதை மாத்திரைகள், 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!