Tiruchirappalli

News February 26, 2025

திருச்சி: குழந்தைகளுக்கான நீரிழிவு இன்சுலின் சிகிச்சை முகாம்

image

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை குழந்தைகள் நலத்துறை மற்றும் இதயங்கள் அறக்கட்டளை சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான முதலாம் வகை நீரிழிவு நோய்க்கான நவீன இன்சுலின் சிகிச்சை வழங்கும் முகாம் நாளை (பிப்.27) காலை அரசு மருத்துவமனை தொடக்கநிலை இடையீட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாமென கூறப்பட்டுள்ளது.

News February 26, 2025

அடையாளம் தெரியாத மூதாட்டி சடலமாக மீட்பு

image

சமயபுரத்தில் இருந்து ஆதி மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் நரசிங்கமங்கலம் வேப்பமரம் மண்டா பிடியில் படுத்திருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 25, 2025

திருவெறும்பூர்: காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

image

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல் நிலைய வருகை பதிவேடு கோப்புகள், குற்ற பதிவேடு கோப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்தார். மேலும் காவலர்கள் பணி குறித்து கேட்டறிந்து குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேர பணி குறித்து ஆலோசனை வழங்கினார்.

News February 25, 2025

திருச்சியில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

image

திருச்சியில் முக்கிய சாலையான கருமண்டபம் அருகே பொன்னகர் பகுதியில் உள்ள சாலையின் நடுவே உள்ள சிக்னல் கம்பம் நடுவில் கீழே விழும் நிலையில் உள்ளது. இதையறிந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் துரித நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் இன்று (பிப்.25) கோரிக்கை விடுத்துள்ளனர்.

News February 25, 2025

திருச்சி சிறையில் வெளிநாட்டு கைதி உண்ணாவிரதம்

image

திருச்சி, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. கொட்டப்பட்டு சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை, உகாண்டா, ஆஸ்திரேலியா, சீனா, பல்கேரியா போன்ற பல்வேறு நாட்டு விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த சிறப்பு முகாமில் உள்ள இலங்கையை சேர்ந்த தங்க ராஜா மகன் சுகந்தன் என்பவர் தன்னை விடுதலை செய்யக்கோரி நேற்று முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

News February 25, 2025

விழுந்த விக்கெட்டில் எழுந்த சகோதரத்துவம்: எம்எல்ஏ இனிகோ

image

திருச்சி கிழக்கு எம்எல்ஏ. இனிகோ, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் குறித்து இன்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,உலகின் எட்டு அணிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றன. சமீபத்தில் நடந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தான் தோல்வி தோல்வி கண்டாலும், கோலியின் சதத்திற்கு பாகிஸ்தான் ஆரவாரம் செய்தனர். இரு நாடுகளுக்கிடையே சகோதரத்துவம் வளர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

News February 25, 2025

திருச்சி மாநகராட்சியின் செயல்பாடுகள் எப்படி?

image

திருச்சி மாநகராட்சி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சி மாநகராட்சியின் செயல்பாடுகள் எப்படி என்பது குறித்த பொதுமக்களின் கருத்துக்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்ய கூறப்பட்டுள்ளது. மேலும் www.sbmurban. org/feedback என்ற இணையத்தில் சென்று மொபைல் நம்பரை உள்ளீடு செய்து திருச்சியில் நீங்கள் வசிக்கும் பகுதியில் தூய்மை செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை பற்றி கருத்துகளை பதிவு செய்யலாம் 

News February 25, 2025

மும்மொழிக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

image

இன்று (பிப்.25) தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பாக மூன்றாவது மொழி முகமூடி அணிந்து விழித்தெழுந்து என்ற தலைப்பில் இந்திய அரசின் மும்மொழிக் கொள்கைத் திட்டத்தையும் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தையும் எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி ரயில் நிலையம் அருகில் நடத்தப்பட்டது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் இலக்குவன் அவர்கள் தலைமை ஏற்றார்.

News February 25, 2025

சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறை அறிவுரை

image

திருச்சி மாவட்ட காவல்துறை பொதுமக்களின் நலன் கருதி இன்று (பிப்.25) முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், குற்ற சம்பவங்களை தடுக்க வீடு, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் பொதுவெளி மற்றும் சாலை போன்றவை தெரியும்படி CCTV கேமராக்கள் பொருத்தவும். குற்ற சம்பவங்கள் தொடர்பான தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கவும் என கூறப்பட்டுள்ளது.

News February 25, 2025

திருச்சி ரயில் நிலையத்தில் சிறப்பு கண்காணிப்பு

image

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து ரயில் நிலையங்களில் உள்ள இந்திய எழுத்துக்களை தார் பூசி அழிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இது போன்ற சம்பவங்கள் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடைபெறாமல் இருக்க, திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் நிலையத்தில் சிறப்பு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!