Tiruchirappalli

News April 14, 2026

திருச்சி: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

திருச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்.13) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

திருச்சி மாவட்டத்தில் முதல் நாளில் 2,425 தபால் ஓட்டு பதிவு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 8,593 பேர் வீட்டிலிருந்து தபால் ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வீடு தேடி சென்று தபால் ஓட்டு பெறும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 9 தொகுதிகளில், 1,380 மூத்த குடிமக்கள், 1,045 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2,425 தபால் ஓட்டு பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 13, 2026

திருச்சி: நடிகர் மன்சூர் அலிகான் ஆஸ்பத்திரியில் அனுமதி

image

லால்குடி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் சட்டமன்ற தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

News April 13, 2026

திருச்சி: பெட்ரோல் தீர்ந்தால் NO TENSION.!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<> ‘Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News April 13, 2026

அதிமுக ஆட்சியில் திருச்சிக்கு செய்தது பட்டியலிட்ட இபிஎஸ்

image

திருச்சியில் பேசிய இபிஎஸ், அதிமுக ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் – கொள்ளிடம் பாலம், ஸ்ரீரங்கம் சட்ட கல்லூரி, வண்ணத்துப்பூச்சி பூங்கா, மெயின் கார்ட் கோட்டை சீரமைப்பு, உய்யக்கொண்டான் கரை சீரமைப்பு, முக்கொம்பு தடுப்பணை உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சத்திரம் பேருந்து நிலையம் பணி 90 % அதிமுக ஆட்சியில் முடிவடைந்தது, ஆனால் ஸ்டிக்கர் ஒட்டி திமுக திறந்து வைத்தது என கூறினார்.

News April 13, 2026

திருச்சி: அமைச்சர்கள் மீது குற்றஞ்சாட்டிய இபிஎஸ்

image

திருச்சியில் பேசிய இபிஎஸ், “திருச்சியில் உள்ள அமைச்சர் ஒருவர் அவரது துறையில் ஊழல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை அனுப்பியும், நடவடிக்கை இல்லை. அதிமுக ஆட்சி அமைந்தால் அதன் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதிமுக ஆட்சியில் மேல்நிலைப்பள்ளிகளை திறந்தோம். ஆனால், இந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 200 பள்ளிகளை மூடி உள்ளார். அவர் மீண்டும் வெற்றி பெற வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

News April 13, 2026

திருச்சி: மக்களே நீங்க உஷாரா இருங்க- இபிஎஸ்

image

திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அதில், “திமுக எம்.எல்.ஏ கிட்னி திருடுகிறார். அதற்கு ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார். திமுகவினர் நடத்தும் மருத்துவமனையில் கிசிச்சை பெற்றவர்கள். உறுப்பு உள்ளதா என ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். மண்ணநல்லூர் தொகுதியில் மீண்டும் அவர் போட்டியிடுகிறார். எனவே தொகுதி மக்களே நீங்க உஷாரா இருங்க” என்றார்.

News April 13, 2026

திருச்சி: மக்கள் பணத்தை ஸ்டாலின் வீணாக்குகிறார்- இபிஎஸ்

image

திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அதில், “தொழில் முதலீட்டை பெற முதல்வர் வெளிநாடு செல்கிறார் என்று பார்த்தால், அங்கு போய் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார். சைக்கிள் ஓட்டுவதற்கு அங்கு போக வேண்டுமா?. அது யாருடைய பணம். மக்கள் பணத்தை ஸ்டாலின் வீணாக்குகிறார்” எனக் குற்றஞ்சாட்டினார்.

error: Content is protected !!