Tiruchirappalli

News April 14, 2026

திருச்சி: B.E படித்தவர்களுக்கு ரூ.74,000 சம்பளம்!

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (Nuclear Power Corporation of India Limited) காலியாக உள்ள Executive Trainee (ET) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 330
3. வயது: 22 – 45
4. சம்பளம்: ரூ.74,000
5. கல்வித்தகுதி: B.E. / B.Tech / B.Sc. (Engg)
6. கடைசி தேதி: 30.04.2026
7. மேலும் அறிய: <>CLICK HERE.<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 14, 2026

திருச்சி: ரூ.1.36 கோடி விடுவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,40,80,503 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.1,36,98,583 தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News April 14, 2026

ஸ்ரீரங்கம்: வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறப்பு!

image

திருச்சி மேலூர் பகுதியில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் இன்று (ஏப்.14) செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, வண்ணத்துப்பூச்சி பூங்கா திறந்திருக்கும். பொதுமக்களின் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் கிருத்திகா தெரிவித்துள்ளார்.

News April 14, 2026

திருச்சி: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

திருச்சி மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News April 14, 2026

திருச்சி: நேரு, அன்பில் மகேஷ்-யை விமர்சித்த EPS

image

திருச்சியில் பேசிய இபிஎஸ், “திருச்சியில் உள்ள அமைச்சர் ஒருவர் அவரது துறையில் ஊழல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை அனுப்பியும், நடவடிக்கை இல்லை. அதிமுக ஆட்சி அமைந்தால் அதன் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதிமுக ஆட்சியில் மேல்நிலைப்பள்ளிகளை திறந்தோம். ஆனால், இந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 200 பள்ளிகளை மூடி உள்ளார். அவர் மீண்டும் வெற்றி பெற வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

திருச்சி: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

image

மணப்பாறை அடுத்த அனியாப்பூரை சேர்ந்தவர் சுப்ரமணி(52). இவர் ஒரு சிறுமியிடம் தவறான செய்கைகளை காட்டி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாயார், மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 14, 2026

திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

image

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை(ஏப்.15) சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் செல்லவிருப்பதால், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க.!

திருச்சி: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

திருச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்.13) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!