India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்து தொடர்ந்து பேட்டி அளித்தார்.அப்போது திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகள், சிறைவாசிகள் உள்ளிட்ட பலர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது எண்டார் அவர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருச்சியில் மட்டும் 61 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <
வனத்துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு வரும் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.மாநில அளவிலான இந்தக் கணக்கெடுப்பில் கள அளவிலான வனத்துறை பணியாளர்கள், பாா்வையாளா்கள், பார்வையாளர்கள், மாணவா்கள், தன்னாா்வலா்கள் ஈடுபடுவா். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஈர நிலங்களை உள்ளடக்கிய இந்த இந்த முன்னதாக, துறை பணியாளா்கள், தன்னாா்வலா்களுக்கு ஒரு வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்ற பின்னர் உயர்கல்வி தொடர்பான உங்கள் கனவுகள் மெய்பட வேண்டும். அதன் மூலம் உங்களது எதிர்காலம் சிறப்பானதாக அமையவும், எண்ணற்ற சாதனைகளை படைக்கவும் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வீடு, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் பொதுவெளி மற்றும் சாலை போன்றவை தெரியும்படி CCTV கேமராக்களை பொருத்த மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் குற்ற சம்பவங்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அல்லது 100 என்ற எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கலாம்.
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் நாளை (மார்ச்.3) தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் திருச்சி மாவட்டத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேர்வுக்காக 1,662 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 220 பறக்கும் படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வில் சொல்வதை எழுதுபவர் 720 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஐஐடியின் போக்குவரத்து ஆராய்ச்சி பிரிவு உட்பட சில சாலை மேம்பாடு ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து சாலை விபத்துக்கள் தொடர்பாக ஆய்வு நடத்தினர். இதில் தமிழகத்தில் 3000 க்கும் அதிகமான இடங்கள் அதிக விபத்துக்கள் நடக்கும் “பிளாக்ஸ்பாட்” இடங்களாக உள்ளன. இதில் திருச்சி, தேனி, தென்காசி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சாலை விபத்துகள் முந்தைய ஆண்டுகளை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். சிறுகனூர் அருகே கொணலையில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் தடுப்புக்கட்டையில் மோதி எதிரே வந்த லாரி மீது மோதிய விபத்தில் சூர்யா சக்கரவர்த்தி, யோகேஷ், மன்சூர், தீபக் ராஜ், ஜெயசுந்தர் ஆகிய 5 பேர் காயமடைந்தனர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவிபச்சைமுத்து அளித்த பேட்டியில் இருமொழிக் கொள்கையில் நமக்கு நம்பிக்கை கிடையாது. அவர் அவர்களுக்கு தாய்மொழி முக்கியம். மொழி என்பது தொடர்பு மொழி மட்டும்தான் எந்த மொழி தேவையோ அந்த வகையில் மும்மொழி கொள்கையை காண வேண்டும். ஹிந்தியை திணிக்க வேண்டும் என கூறக்கூடாது என கூறினார்.
திருச்சியில் இன்று நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு, செய்தியாளர்களிடம் பேசியது: சீமான் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கை சட்டபூர்வமாக எடுத்த நடவடிக்கைதான். அதில் அரசியல் அழுத்தம் எதுவும் இல்லை.அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அமமுக கலந்து கொள்ளும்.மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை. விருப்பமுள்ளவர்கள் 3வது மொழியை கற்றுக்கொள்ள தான் கூறியுள்ளார்கள்.
Sorry, no posts matched your criteria.