India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டத்தில் நேற்று (20.05.2024) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. திருச்சி (கிழக்கு) கோல்டன் ராக் 45.2 மி.மீட்டர், விமான நிலையம் 129.4 மி.மீட்டர், திருச்சி (மேற்கு) ஜங்ஷன் 82.8 மி.மீட்டர், டவுன் 68 மி.மீட்டர் என திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 1154.1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 48.09 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சியில் கடந்த 24.7.2019ம் தேதி ஒரு பெண்ணிடம் 6 1\2 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்ற வழக்கில் கலையரசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் புலன் விசாரணை இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் குற்றம் சாட்டப்பட்ட கலையரசனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை நிறுவ மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று மதியம் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் பாலக்கரையில் அமைந்துள்ள பழைய சிவாஜி கணேசன் சிலை இருக்கும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் சிவாஜி கணேசன் சிலையை அமைக்க உடனே நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கினை மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார், இந்திய தேர்தல் ஆணைய உத்தரவினை தொடர்ந்து, இன்று மாதாந்திர தணிக்கை செய்தார். இந்த தணிக்கையின் போது மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று (மே.19) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புள்ளம்பாடி பகுதியில் 10 செ.மீட்டரும் நந்தியாறு பகுதியில் 7 செ.மீட்டரும் துறையூர், கல்லக்குடி, பொன்மலை ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டரும் பொன்னையார் அணை, மணப்பாறை ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும் மழைப்பதிவானது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, திருச்சி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினரிடமும் , ராணுவ துறையினரிடமும் தீவிரமாக வாக்கு எண்ணிக்கை மையத்தை கண்காணிக்க உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இன்று அகில பாரத இந்து மக்கள் அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் கோவில் வளாகத்திற்குள் வெறி நாய்களும், மாடுகளும் சுற்றி திரிகின்றன. சமீபத்தில் சென்னையில் வளர்ப்பு நாய் ஒன்று சிறுமியை கொடூரமாக கடித்தது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரினர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று (19.05.2024) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. திருச்சி (கிழக்கு) கோல்டன் ராக் 36.2 மி.மீட்டர், விமான நிலையம் 12 மி.மீட்டர்,
திருச்சி (மேற்கு) ஜங்ஷன் 16 மி.மீட்டர், டவுன் 11.3 மி.மீட்டர் என திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 460 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 19.17 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாநகரின் நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றான வயலூர் சாலைக்கு மாற்றாக மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் சாலையாக உய்யகொண்டான் வாய்கால் கரை இருந்து வருகிறது. இந்த சாலையில் சமீபத்தில் ஏற்பட்ட சிறு விரிசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வாகனங்களில் செல்பவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ளது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொட்டியம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு அனலாடீஸ்வரர் திருகோவிலில் வைகாசி விசாக பெருந் திருவிழா 19.05.2024 ஏழாவது நாள் இன்று காலை சோமாஸ்கந்தர் அம்பாள் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் தொட்டியம் திருச்சி முசிறி காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
Sorry, no posts matched your criteria.