India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி வாசவி கிளப் எலைட் கப்புள்ஸ் சார்பில் மனித நேயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று திருச்சி ரெங்கா அரங்கில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் கலந்துகொண்டு மனிதநேயம் குறித்து பேசினார்.மேலும் வாசவி கிளப் தலைவர் ரமேஷ் பாபு மற்றும் துளசி அறக்கட்டளை நிறுவனர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி ஸ்ரீ ரங்கத்தில், வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைந்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவான இது 2014-ம் ஆண்டு காவிரி ஆற்றின் கரையில் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இந்த பூங்கா, வண்ணத்துப்பூச்சி இனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அதன் எண்ணிக்கையை பெருக்கவும் ரூ.8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது. இது வெப்ப மண்டல வண்ணத்துப்பூச்சி காப்பகமாகவும் உள்ளது.
திருச்சி தேவதானம் ரயில்வே கேட் அருகில் நேற்று மாலை அம்மு,வளர்மதி ஆகிய இரு பெண்கள் அப்பகுதியில் உள்ள குப்பை மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.முட்புதரில் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று உயிருடன் இருப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
திமு கழக முதன்மை செயலாளரும்
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே. என. நேரு அவர்கள் நேற்று தொகுதி மக்களையும் கழக உடன்பிறப்புகளையும் திருச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். கழக நிர்வாகிகள் தங்களது இல்ல திருமணத்திற்கு அழைப்பு விடுத்தும், கோயில் திருவிழாக்களுக்கு அழைப்பு விடுத்தும் அழைப்பிதழ்களை வழங்கினர்.
திருச்சி சுப்ரமணியபுரம் ராஜா தெரு சகாய மரியநாதன் சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச் சாவு அடைந்தாா். அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கப்பட்டது. அவரின் குடும்பத்தினரை இன்று மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் , மாவட்டச் செயலாளர் ஆர்.இளங்கோ, நிர்வாகிகள் ஆர்.கே.ராஜா, வெ.ரா.சந்திரசேகர் ஆகியோர் நேரில் சென்று பாராட்டினார்கள் ஆறுதல் தெரிவித்தனர்.
திருச்சி அருகே மணிகண்டன் யூனியன் அலுவலகம் அருகே வாட்டசியர் ஓட்டுநர் ஒட்டி சென்ற கார் தாறுமாறாக சென்று எதிர் திசையில் வந்த வாகனங்கள் மீதும், பைக் மீதும் மோதியதில் தனபால் உயிரிழந்த நிலையில் விபத்தில் படுகாயமடைந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோயில் பூசாரி மணி இன்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சியில்
னு ( 26.5.24) இன்று முட்டையின் விலை அதிகரித்துள்ளது. 1முட்டை, 4அல்லது 5ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று 1முட்டை 6ரூபாய்க்கு உயர்ந்து 1அட்டை 180 விற்கப்படுகிறது.அசைவ பிரியர்களும் சரி,சைவ பிரியர்களின் சிலரும்,உடற்பயிற்சி செய்பவர்களும் ஊட்டச்சத்துள்ள உணவு வகையான முட்டையை விரும்பி சாப்பிடுவது வழக்கம். ஆனால் முட்டையின் இந்த விலை உயர்வு குடும்பத்தலைவிகளுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கோடை நூலக முகாம் சில தினங்களாக நடந்து வருகிறது தினமும் பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் அற்புதம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் அறிவியல் அற்புதங்களை அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மணிகண்டன் பாடலுடன் விளக்கினார்.
திருச்சி மாநகராட்சி வார்டு எண் 54க்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள நீர் தேக்க தொட்டியிணை இன்று மாநகராட்சி ஆணையர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, வார்டு எண் 65க்கு உட்பட்ட வயர்லெஸ் சாலையில் மின்கம்பி அமைப்பது சம்பந்தமாக இளநிலை பொறியாளர் அவர்களிடம் கலந்தாலோசித்து, மின்கம்பி அமைக்கும் பணியினையும் பார்வையிட்டார்.
Sorry, no posts matched your criteria.