India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண் குமார் ஜாதி வெறுப்புடன் செயல்படுவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஐ.பி.எஸ். அதிகாரி வருண் குமார் ஜாதி வெறுப்புடன் செயல்படுகிறார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. அவர் தேவர், நாடார், கோனார், தேவேந்திரர்களுக்கு எதிராக செயல்படுகிறார். சாட்டை துரைமுருகனை குறிவைத்து தான் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது” எனத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
துறையூர் அடுத்த சின்ன இலுப்பூர் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி மாணவி ரோகிணி, ஜேஇஇ தேர்வில் 73.8% பெற்று தேர்ச்சி பெற்றார். இதன் காரணமாக அவருக்கு திருச்சி என்ஐடிஇல் இடம் கிடைத்தது. இந்நிலையில் நேற்று மாணவி ரோகிணியை பாராட்டி, பெரம்பலூர் எம்பி அருண்நேரு மடிக்கணினி வழங்கினர். இதில் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-1 பதவிக்கான போட்டித் தேர்வு வரும் 13/7/2024 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. திருச்சியில் 31 தேர்வு மையங்களில் 9,960 நபர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர். இந்த தேர்வு பணிகளுக்கு 31 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், 10 இயங்கு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகையை தொடர்ந்து அவதூறு பரப்பும் பாஜக தமிழ்நாட்டின் மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு நாளை (11-07-2024) காலை 10 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அக்னி பாத் திட்டத்தின் கீழ், அக்னிவீர் வாயுவாக இந்திய விமானப்படையில் சேர திருமணமாகாத ஆண் மற்றும் பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவு மற்றும் தேர்வு கட்டணம் ரூபாய் 550 மட்டுமே.விண்ணப்பதாரர்கள் 3.7.2004 அன்று அல்லது அதற்கு பின்பு பிறந்திருக்க வேண்டும். தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடம் சம்பந்தமான வினாடி வினா தேர்வினை இணையவழி வாயிலாக நடைபெற்று வருகிறது. இன்று திருச்சி மாவட்டத்தில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான வினாடி வினா தேர்வு நடந்தது. தேர்வில் திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு பள்ளி பயிலும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கு கொண்டனர்.
திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் நேற்று செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து நாள்தோறும் காலை புறப்படும் திருச்சி – காரைக்குடி டெமு ரயில் ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகள் வரும் 17 ஆம் தேதி மொகரம் பண்டிகை தவிர அனைத்து நாட்களும் 4.15 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு 2 சக்கர வாகனம் வாங்க அரசு மானியம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் பயன் பெற்று வாகனம் வாங்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணி புரிகிறார் என்பதற்கான சான்றை பெற்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. எனவே இதற்கான விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார்.
திருவெறும்பூர் வட்டம், சூரியூர் மற்றும் இலந்தைப்பட்டி கிராமத்தில் சிப்காட் அமைய உள்ள இடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.