India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எம்.பி.ஏ முதுகலை தொழில் படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு வரும் 11ம் தேதி காலை 10.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடத்தப்பட உள்ளது. மேலும் நுழைவுச்சீட்டினை பல்கலைக்கழக வளாகத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவு தேர்வு தகவல் ஏற்கனவே குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் 09.06.2024 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர், குடிமை பணிகளுக்கான தேர்வு தொகுதி-IV தொடர்பாக அனைத்து துறை அரசு அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தேர்வு சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. மேலும் இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சவுக்கு சங்கர் மீது முசிறி டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு ஜூன் 4ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது. அதேபோல், சிறப்பு உதவி ஆய்வாளர் லதா திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் மீது கொடுக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கின் விசாரணையில் நேற்று மாலை சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 220 கால்நடைகள் இருப்பு பாதையை கடந்து செல்லும் பொழுது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன. அதேபோல் ரயில் பாதையைக் கடந்த 262 பேரில், 230 பேர் உயிரிழந்துள்ளதாக கோட்டமேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து விழுப்புரம் வரை இருப்பாதை வழிதடத்தில் அதிகமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமுத்து. இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் பெரம்பலூர் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். காரை ஹரிஷ் குமார் ஓட்டி சென்ற நிலையில் துறையூர் புறவழி சாலையில் சென்றபோது எதிர்பாரதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 9 மாத குழந்தை உட்பட 4 பேர் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் தொகுதி சோமரசன் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ இல்லத்தில் நேற்று பொதுமக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளித்து எம்எல்ஏவிடம் நிறைவேற்றி தரக் கோரிக்கை வைத்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ பழனியாண்டி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் அருண் நேரு போட்டியிட்டு வெற்றி 5 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இன்று திமுக மாநில மகளிர் அணி செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற எம்பி கனிமொழியிடம் அவரது சென்னை இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்தினை பெற்றார். நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இந்திய அரசின் சார்பில் நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல் மின்சார விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி அக்டோபர் 2022 முதல் 2 ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தை தொடர்பு கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று, இளங்கலை மருத்துவ படிப்பில் தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது.இந்த பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் 6 பேர் 685 மற்றும் 700க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தின் துணி நூல் துறையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக தமிழக அரசு சார்பில் 10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அழைக்கப்பட உள்ளது. எனவே திருச்சியை சேர்ந்த இளைஞர்கள் இந்த பயிற்சி பெற https://tntextiles.tn.gov.in./jobs/ என்ற வலைத்தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.