Tiruchirappalli

News June 6, 2024

திருச்சி விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

2025 ஆம் ஆண்டிற்கு மத்திய அரசின் பத்ம விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் பெறுவதற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் விளையாட்டில் தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் தங்களுடைய விவரங்களுடன் தங்களுடைய சாதனைக்கான ஆவணங்களுடன் 26.06.2024 தேதிக்குள் விண்ணப்பங்களை https://awards.gov.in and https://padmaawards.gov.in ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News June 6, 2024

திருச்சியில் மாஜி அமைச்சர் பேட்டி

image

திருச்சியில் இன்று அதிமுக மாஜி அமைச்சர் கு.ப கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், பாஜகவுடன் கூட்டணி வைத்த ஜெயலலிதா  இனி அவர்களுடன் கூட்டணி இல்லை, என்பதை தெளிவாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். கட்சியை வளர்த்தவர்களுக்கு தான் தோல்வியின் வலி தெரியும். எனக்கு வலிக்கிறது. மேலும், அதிமுக  பணக்காரர்களால் உருவான கட்சிஅல்ல, ஏழை எளியவர்களால் எழுச்சி பெற்ற இயக்கம் என்றார்.

News June 6, 2024

தொழில் நஷ்டத்தால் விஷம் அருந்தி இளைஞர் தற்கொலை

image

திருச்சி மாவட்டம் டோல்கேட் செக்போஸ்ட் அருகே வசிப்பவர் பாஸ்கர் திருமணம் ஆகவில்லை இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்த பாஸ்கர் நேற்று விஷம் அருந்தியுள்ளார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து இவரது தாய் செல்வி புலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News June 6, 2024

திருச்சி:சாக்சீடு தொண்டை நிறுவனம் உறுதிமொழி ஏற்பு

image

திருச்சியில் நேற்று உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு சாக்சீடு தொண்டு நிறுவனம் சார்பாக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாப்பு தலைமையில் நடந்தது.
சாக்சீடு நிறுவன இயக்குனர் அருட். சகோதரி பரிமளா முன்னிலை வகித்தார். ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் முகம்மது சாதிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்றனர்.

News June 5, 2024

எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற துரை வைகோ

image

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட சோமரசன்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டியை திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் ஆக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் மகன் துரை வைகோ இன்று நேரில் சந்தித்தார். மேலும் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக நன்றி செலுத்தி எம்எல்ஏவிடம் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார்.

News June 5, 2024

திருச்சியில் திரண்ட கரு மேகங்களின் கூட்டம்

image

திருச்சி மாநகரப் பகுதியில் இன்று காலை முதல் வெயில் கடுமையாக இருந்த நிலையில் மாலை 4 மணிக்கு மேல் கரு மேகங்கள் கூடி மழைக்கான அறிகுறிகள் தென்பட்டது. இதனால் வெப்பம் குறைந்து குளிர் காற்று வீசியது. இதனால் வாகனத்தில் சென்ற வாகன ஓட்டிகளுக்கும் , பொதுமக்களும் இனிமையான சூழல் ஏற்பட்டது. ஆனால் மழை இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

News June 5, 2024

திருச்சி : நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

திருச்சி மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

News June 5, 2024

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து அலுவலர்களுக்கு ஆட்சியர் பிரதீப் குமார் மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 5, 2024

திருச்சி தொகுதி தேர்தல் முடிவு!

image

2024 மக்களவைத் தேர்தல்:
*மதிமுக வேட்பாளர் துரைவைகோ- 5,42,213 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் கருப்பையா – 2,29,119 வாக்குகள்
*நாதக வேட்பாளர் ராஜேஷ் – 1,07,458 வாக்குகள்
*அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்- 1,00,747 வாக்குகள்

News June 5, 2024

திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

image

திருச்சியில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது இந்நிலையில் கல்லக்குடி 0 மி.மீ, லால்குடி 4.2 மி.மீ, நாத்தியார் ஹெட் 2.6 மி.மீ, புள்ளம்பாடி 5.2 மி.மீ, தேவிமங்கலம் 15.4 மி.மீ, சமயபுரம் 27.2 மி.மீ, சிறுகுடி 11.2 மி.மீ வாத்தலை அணைகட்டு 18.8 மி.மீ, முசிறி 23 மி.மீ, புலிவலம் 7 மி.மீ, தாத்தையங்கார்பேட்டை 10 மி.மீ, மழை அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது

error: Content is protected !!