India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று காலை திருச்சி ஆட்சியரகம் முன்பாக மக்கள் உரிமை கூட்டணியின் சார்பில்
மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட 10 குளங்களை காவேரி ஆற்று தண்ணீரை கொண்டு நிரப்பி நீர்நிலைகளை பாதுகாக்க கோரி அந்த இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முஹம்மது காசிம் தலைமையில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூகநீதி பேரவை, மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 50,655 கிலோ தூசி மற்றும் வண்டல் நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 25 தினத்திலிருந்து ஜூன் 9 வரை மொத்தம் 42.5 கிலோமீட்டர் கால்வாய் தூர்வாரும் பணியும், ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று(ஜூன் 11) 12 மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் புதிய விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று ( ஜூன் 11) முதல் பயன்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் நாயால் ஆகியோர் பயணிகளுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். நிகழ்வில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகர் பகுதியில் வாகன ஓட்டுனர் சங்கர் பெயர் பலகையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் மாநில ஓட்டுநர் அணி செயலாளர் செங்குட்டுவன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்றுமுதல் பயன்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் நயால் ஆகியோர் பயணிகளுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். திருச்சி விமான நிலைய புதிய முனையத்திற்கு வந்த முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் மக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
தொட்டியம் அருகே பாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று மாணவர்களை வரவேற்கும் விழா, நூலக திறப்பு விழா, மரக்கன்று நடும் விழா, இலவச பாடப்புத்தகம் வழங்கும் விழா, இலவச ஆதார் மைய துவக்க விழா, ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா ராணி முன்னிலை வகித்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்
கே. என். நேரு அவர்கள் திருச்சியில் உள்ள அலுவலகத்தில் இன்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அமைச்சர் தனது தொகுதியில் இருந்து வந்த கட்சி பிரமுகர்களையும் பொதுமக்களிடமும் உள்ள குறைகளை கேட்டு அறிந்தார். அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் லால்குடி, மணச்சநல்லூர், மணப்பாறை, மருங்காபுரி, முசிறி, ஸ்ரீரங்கம்,,தொட்டியம், துறையூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரம்பூர் ஆகிய வட்டங்களில் 301 தேர்வு மையங்களில் 66 ஆயிரத்து 949 பேர் குரூப் 4 தேர்வை இன்று எழுதினர். 18 ஆயிரத்து 798 பேர் தேர்வு எழுதவில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஆய்வு செய்த பின்பு தெரிவித்தார்.
தொட்டியம் வட்டம் அரங்கூர் முல்லை நகரில் நேற்று பாண்டி என்பவர் வேகமாக டூவீலரில் சென்றுள்ளார். அங்கு இருந்தவர்கள் ஏன் வேகமாக செல்கிறாய் என்று தகாத வார்த்தைகளை பேசியும் குச்சியால் கல்லாலும் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த பாண்டி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கிய நான்கு பேர் மீது தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி அஞ்சல் துறை கோட்டத்தில் உள்ள அனைத்து புதுப்பிப்பு மையங்களிலும் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டு நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. தொடர்ந்து இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள்,ஆதார் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.ஜூலை 5-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
Sorry, no posts matched your criteria.