India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவெறும்பூர் அடுத்துள்ள துவாக்குடி பெட்ரோல் பங்கில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் காருக்கு டீசல் போடுள்ளனர். பின்னர் பணம் செலுத்தும் போது கள்ள நோட்டுகளை கொடுத்து சிக்கிக்கொண்டனர். அவர்களை பிடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், துவாக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் பயணித்த காரையும் பறிமுதல் செய்தனர்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

லால்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர், அருகில் உள்ள வீட்டில் தனியாக இருந்த 17வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் தாயார் லால்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ராஜா கைதுசெய்யப்பட்டு, திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் குற்றம் உறுதிசெய்யப்பட்ட நிலையில், ராஜாவுக்கு 20ஆண்டு சிறை தண்டனையும் ரூ.25000 அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

2026-27ஆம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் பிப்.28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-22501006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

வளநாடு அடுத்த புதுக்குடியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் தனது மனைவியுடன் நேற்று திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சொரியம்பட்டி அருகே இ-பைக்கில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த கார் மோதி காயமடைந்தனர். இந்நிலையில் கார் ஓட்டுநர் கஸ்தூரிராஜ் என்ப்வருக்கு திடீரென அதிர்ச்சியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொட்டியம் பகுதியில் இன்று (ஜன.21) மின் நிறுத்தம் செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணமாக, மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, தொட்டியம் பகுதியில் இன்று மின் நிறுத்தம் கிடையாது என்றும், வழக்கம் போல் மின் விநியோகம் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுக்கு சட்டரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வகையில், திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமையன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு, சட்ட ஆலோசனைகளை பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Sorry, no posts matched your criteria.