Tiruchirappalli

News July 23, 2024

பொன்மலை அருகே அதிமுக ஆர்ப்பாட்டம்

image

திருச்சி பொன்மலை அருகே உள்ள மேல கல்கண்டார்கோட்டை திடலில் இன்று திமுக அரசை கண்டித்து அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பா.குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசை கண்டித்தும், கையில் பதாகைகள் ஏந்தியும் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News July 23, 2024

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

image

திருச்சி மரக்கடை பகுதியில் இன்று அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், திமுக அரசு 3வது முறையாக மின்கட்டண உயர்வை உயர்த்தியதை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

News July 23, 2024

நாளை மாநகராட்சி கூட்டம் மேயர் அழைப்பு

image

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நாளை காலை 10:30 மணிக்கு திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் லூர்துசாமி திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெறும். இதில் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது பகுதி குறைகளை தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

News July 23, 2024

தெற்கு ரயில்வே அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம் பொன்மலை கோட்டத்தில் 94 அப்ரண்டீஸ் பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12.08.2024 கடைசி தேதியாகும். https://rrccr.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க..

News July 23, 2024

பொது சுகாதாரத்துறையில் வேலை இருக்கு

image

திருச்சி மாவட்ட சுகாதார அலுவலகம், இணை இயக்குநர் நலப்பணிகள், முதல்வர் அரசு தலைமை மருத்துவமனை, மாநகர் நல அலுவலர் திருச்சி மாநகராட்சி ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு பிரிவுகளில் இருக்கும் 36 காலிப்பணியிடங்களில் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. https://tiruchirappalli.nic.in/ என்ற இணையத்தளத்தில் ஜூலை 31 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

News July 23, 2024

TNPL:சேப்பாக் அணி அபார வெற்றி

image

TNPLல் நேற்று நடைபெற்ற போட்டியில் திருச்சி அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றுள்ளது சேப்பாக் அணி. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய திருச்சி 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. சிறப்பாக ஆடிய 26 ரன்கள் குவித்ததுடன் 1 விக்கெட் கைப்பற்றிய அபிஷேக் தன்வார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

News July 22, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 22, 2024

குழந்தைக்கு நடைவண்டி வழங்கிய ஆட்சியர்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1360 ரூபாய் மதிப்பிலான மாற்றுத்திறனாளி குழந்தைக்கு நடந்து செல்லும் வகையில் நடை வண்டியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News July 22, 2024

பொதுமக்கள் இடமிருந்து குவிந்த 937 மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றுதல், ஜாதி சான்றிதழ், இதர சான்று, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 937 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

News July 22, 2024

ஒரே நாளில் 66 நாய்கள் பிடிப்பு

image

திருச்சி மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இன்று சாலையில் சுற்றி திரிந்த 66 நாய்கள் பிடிக்கப்பட்டது.பின்பு நாய்கள் கருத்தடை மையத்தில் இன கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ள கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி நிர்வாகத்தையும், மாநகராட்சி ஆணையரையும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

error: Content is protected !!