Tiruchirappalli

News January 22, 2026

திருச்சி: தொழில் முனைவோர் பயிற்சிகள் அறிவிப்பு

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சிகள், திறன் வளர்ப்பு பயிற்சிகள், மதிப்பு கூட்டல் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட உள்ளது. இது குறித்த விவரங்களுக்கு திருச்சி மாவட்ட திட்ட மேலாளர் கார்த்திகேயன் (8610687193) என்பவரை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

திருச்சி: பயணிகள் ரயில் ஒருநாள் ரத்து

image

ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து காலை 8:05 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரும், ஈரோடு – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில், வரும் ஜன.27ஆம் தேதி ஒரு நாள் மட்டும், கரூர் – திருச்சிராப்பள்ளி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து, கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

திருச்சி: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News January 22, 2026

திருச்சி: பிரதமர் ஓய்வூதிய திட்டத்தில் இணைய அழைப்பு

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பிரதம மந்திரி ஓய்வூதிய திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி, இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

திருச்சி மாவட்டத்திற்க்கு விருது – மற்றுமொரு பெருமை!

image

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், நிகழாண்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்ததற்காக, திருச்சி மாவட்டத்திற்கு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியாவிடம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

News January 22, 2026

திருச்சி: ATM-யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

image

திருச்சி மக்களே ATM-யில் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.

News January 22, 2026

திருச்சி மாவட்டத்திற்க்கு விருது – மற்றுமொரு பெருமை!

image

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், நிகழாண்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்ததற்காக, திருச்சி மாவட்டத்திற்கு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியாவிடம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

News January 22, 2026

திருச்சி மாவட்டத்திற்க்கு விருது – மற்றுமொரு பெருமை!

image

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், நிகழாண்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்ததற்காக, திருச்சி மாவட்டத்திற்கு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியாவிடம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

News January 22, 2026

திருச்சி: ரேஷன் குறைத்தீர்க்கும் கூட்டம்

image

திருச்சி மாவட்டத்தில் வரும் 24-ம் தேதி திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, மருங்காபுரி, லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை தெரிவிக்க மாவட்ட கலெக்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News January 22, 2026

திருச்சி: பட்டப்பகலில் துணிகரம் – 2 பேர் கைது

image

திருச்சி, அம்மையப்பா நகரில் பெட்டி கடை அருகில் கடந்த ஜன.20ம் தேதி காலை ரங்கராஜ் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மாரிமுத்து(23), சிவா(19) ஆகிய 2 பேர் அரிவாளைக்காட்டி பணத்தைப் பறிக்க முயன்ற போது, பொதுமக்களை அவர்களை பிடித்து ஸ்ரீரங்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனடர். பின் வழக்கு பந்திந்த போலீசார், அவர்களது பைக்க பறிமுதல் செய்தனர். மேலும் 2பேரும் நீதிமன்ற காவலில் உள்ளனர்.

error: Content is protected !!