India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <

திருச்சி – புது ஜல்பைகுரி (மேற்குவங்கம்) அதிவிரைவு ரயிலானது (20610) வரும் 28 ஆம் தேதி முதல் புதன்கிழமைகளில் திருச்சியிலிருந்து காலை 5.45 மணிக்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் 22 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு தஞ்சை, சென்னை எழும்பூா், விஜயவாடா, விசாகப்பட்டினம், கோரக்பூா், அந்தூல், டங்குரி, போல்பூா் வழியாக புது ஜல்பைகுரிக்கு வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திலிருந்து நாள் தோறும் பகல் 1 மணிக்கு புறப்படும், திருச்சி – பாலக்காடு விரைவு ரயிலானது, பொறியியல் பணிகள் காரணமாக வரும் 27ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கரூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு சென்றடையும் என, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – கரூர் பயணிகள் ரயில் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – கரூர் பயணிகள் ரயிலானது (76809) வரும் ஜன.27ஆம் தேதி ஒரு நாள் மட்டும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. எனவே பயணிகள் தங்களது பயணத்திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, பண்ணப்பட்டியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்(40), பொன்னுச்சாமி(47). இவர்கள் வளர்த்து வந்த செம்மறி ஆடுகளை, மேய்ச்சலுக்காக கருப்பரெடி மலையடிவாரத்தில் விட்டிருந்தனர். பின்னர் ஆடுகள் வீடு திரும்பாத நிலையில், அங்கு சென்று பார்த்தபோது 47 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து ரத்தங்காளுடன் உயிரிழந்து கிடந்துள்ளன. இதுகுறித்த புகாரின்பேரில், வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் விசாராணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வரும் பிப்.6 ஆம் தேதி ஆடு வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டு இனங்கள், ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்குதல் மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0431-2331715 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய தலைவர் தெரிவித்துள்ளார்.

மணப்பாறை அடுத்த விடத்திலாம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார். கூலித்தொழிலாளியான இவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நேற்று முந்தினம் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை, தியாசேகர் ஆலை, விடத்திலாம் பட்டி, மற்றும் பன்னாங்கொம்பு ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.23) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அங்கிருந்து மின்விநியோகம் பெறும் மணப்பாறை நகரம், வெள்ளக்கல், நொச்சிமேடு, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, முத்தப்புடையான்பட்டி, களத்துப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.!

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பார்வை திறன் குறைபாடுடையவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக, இலவச பேருந்து பயண அட்டையினை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.