India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தினை இன்று அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஸ் இன்று ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மண்டல தலைவர் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் – திருச்சி அணிகளுக்கு இடையேயான TNPL போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு திருச்சி அணி, 198 ரன்கள் எடுத்தது. 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் அணி, 163 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை தழுவியது. இதனால் திருச்சி சோழாஸ் அணி 35 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
திருச்சி-அபுதாபி இடையே வாரநாள்களில் 4 விமான சேவைகள் இயக்கப்பட உள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. வார நாள்களில் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு இயக்கப்படும் விமான சேவை, ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் ஸ்டெம் பூங்காவில் திருச்சி மாநகராட்சி சார்பில் 24 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் VR தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட வீடியோக்களை தரவிறக்கம் செய்து பார்க்க முடியும். ஒருவருக்கு தலா 30 நிமிடங்கள் வரை அனுமதி அளிக்கப்படுகிறது. நுழைவு கட்டணமாக மாணவர்களுக்கு ரூ.30 முதல் 50 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வீட்டு குடிநீர் இணைப்புகளில், மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். இதில் தண்ணீரை உறிஞ்ச பயன்படுத்திய 4 மின் மோட்டார்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் சரவணன் எச்சரித்துள்ளார்.
மதுரை ரயில்வே கோட்ட வழித்தடங்களில் தற்போது பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து திருச்சி ரயில் நிலையத்திலிருந்து தினமும் காலை 10.15 மணிக்கு புறப்படும் காரைக்குடி டெமு ரயில் இம்மாதம் முழுவதும் 4 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக மதியம் 2.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே காரைக்குடி செல்லும் பயணிகள் அனைவரும் மதிய நேரத்தில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி – கோலாலம்பூர் இடையே பதிக் ஏர் விமான நிறுவனம் தன்னுடைய விமான சேவைகளை தினசரி 2ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பாலும், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன்பேரிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி சிந்தாமணி பகுதியில் இருந்து ஸ்ரீரங்கத்துடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இரும்பு பாலம் பழுதடைந்ததால் அதே இடத்தில் மேலும் ஒரு பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (ஜூலை 12) நடைபெற்றது. இந்நிலையில், பாலத்தின் விவரம் வெளியாகியுள்ளது. நீளம் 545 மீட்டரும், அகலம் 17.75 மீட்டரும், அதற்கான மொத்த செலவு 106 கோடி ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் குரூப்-1 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வினை எழுத திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 9904 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இன்று தேர்வினை எழுத 6719 நபர்கள் மட்டும் வருகை தந்தனர். மீதம் 3,185 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்தத் தேர்வானது திருச்சியில் மொத்தம் 31 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
தேசிய மாணவர் படையின் 17 இயக்குநகரங்களுக்கு இடையிலான, தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் திருச்சியில் தனியாா் விளையாட்டுப் பயிற்சி மையத்தில் ஜூலை 12ஆம் தேதி தொடங்கியது. இதில், நாடு முழுவதும் மொத்தம் 17 அணிகளைச் சேர்ந்த 300 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா். துப்பாக்கியை கையிலேந்தி நின்ற நிலையிலும், மண்டியிட்டும், 2 மணி நேரத்துக்குள் 50 மீட்டா் தொலைவு இலக்கை குறிபாா்த்தனர்.
Sorry, no posts matched your criteria.