India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டத்தில் நேற்று பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 8.9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் சராசரியாக 0.37 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக திருச்சி (மேற்கு) ஜங்ஷன் 2 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வபெருந்தகை ஜூலை 19ஆம் தேதியன்று திருச்சி பாராளுமன்ற பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதுகுறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் அருணாச்சல மன்றத்தில் நடைபெற இருக்கிறது. இதில் திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட அனைத்து தேசிய, மாநில நிர்வாகிகள், அனைவரும் தவறாமல் பங்கேற்கும்படி கூறப்பட்டுள்ளது.
திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.எஸ்.குமார் தந்தை செல்வராஜ் இன்று இயற்கை எய்தினார். இவரது இறுதி ஊர்வலம் மாலை 5 மணி அளவில் தா பேட்டையில் அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வபெருந்தகை ஜூலை 19ஆம் தேதியன்று திருச்சி பாராளுமன்ற பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதுகுறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் அருணாச்சல மன்றத்தில் நடைபெற இருக்கிறது. இதில் திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட அனைத்து தேசிய, மாநில நிர்வாகிகள், அனைவரும் தவறாமல் பங்கேற்கும்படி கூறப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 897 மனுக்கள் வருகை தந்தது. அதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், இதர சான்றுகள் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அரசின் நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.
திருச்சி மாநகராட்சியில் மண்டலம் 01 – 10,805 கிலோ, மண்டலம் 02 – 4,550 கிலோ, மண்டலம் 03 – 7,500 கிலோ, மண்டலம் 04 – 9,100 கிலோ மற்றும் மண்டலம் 05 – 9,640 கிலோ என மொத்தம் = 41595 கிலோ தூசி மற்றும் வடிகால் வண்டல் நீக்கப்பட்டது. மேலும் திருச்சியை சுற்றி 19 கிலோமீட்டர் மழை நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றதாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கம்பரசம்பேட்டை அருகே காவிரிக் கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி மாநகரின் பறவைகள் பூங்கா மற்றும் பறவைக் கூடத்தின் 85 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் பறவைகள் பூங்காவை நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் எம்.பிரதீப்குமார் ஆகியோர் சமீபத்தில் ஆய்வு செய்தனர். இந்த பறவைகள் பூங்கா 60,000 சதுர அடி மற்றும் 70 அடி உயரம் கொண்ட தளம் கொண்டது.
திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு SRMU ரயில்வே தொழிற்சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரன் பேட்டியளித்தார். அதில், ரயில்வேயில் சில துறைகளை தனியாரிடம் ஒப்படைத்து விட்டதால் தொடர்ச்சியாக ரயில் விபத்துகள் நடக்கிறது. இதனால் ரயில்வே தொழிலாளர்களின் பணி இழப்பு மட்டும் இன்றி, பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது.எனவே ஒன்றிய அரசு தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்றார்.
பெருந்தலைவர் காமராஜர் 122 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று காலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், சேர்மன் துரைராஜ் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.