India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜூலை 30ஆம் தேதி திருச்சிக்கு வருகை தர உள்ளார். மேலும் அவர் திருச்சியில் 2 நாட்கள் தங்கியிருந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனை முன்னிட்டு ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமையில், அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அதிகாரிகளுக்கு ஆட்சியர் ஆலோசனை வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று (ஜீலை23) அறிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை https://tiruchirappalli.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் கடந்த 11 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த முகாம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற ஆணையிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் முகாம் நடைபெறும் நாளில் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று (ஜூலை 23) அறிவித்துள்ளார்.
திருச்சி கே.கே நகர் துப்பாக்கி சுடும் மன்றத்தில் இன்று மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில்,12 வனமண்டலங்களிலிருந்து 22 வீரர்கள், 5 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில்,கலந்து கொண்டவர்களுக்கு 0.22 ரக தோட்டாக்கள் தலா 10 வழங்கப்பட்டது.
இப்போட்டியை திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 26ம் தேதி வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமில் பல்வேறு காலி பணியிடங்களுக்கு புதிய மற்றும் அனுபவமிக்க வேலைநாடுநர்களை அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப நிரப்ப உள்ளனர். எனவே, திருச்சி மாவட்ட வேலைநாடுநர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன் பெற மாவட்ட ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் நிதிஅமைச்சர் நிர்மலா சிதாராமன் தாக்கல் செய்தார்.இது குறித்து கருத்து தெரிவித்த திருச்சி சிவா பீகார், ஆந்திரா போன்ற கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதியை அள்ளிதந்துள்ளனர். ஆனால் தமிழகத்திற்கான திட்டங்கள் ஏதும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.எனவே பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி திருச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பிரகாஷ் சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வெளியிட்டுள்ளார்.
திருச்சி பொன்மலை அருகே உள்ள மேல கல்கண்டார்கோட்டை திடலில் இன்று திமுக அரசை கண்டித்து அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பா.குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசை கண்டித்தும், கையில் பதாகைகள் ஏந்தியும் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மரக்கடை பகுதியில் இன்று அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், திமுக அரசு 3வது முறையாக மின்கட்டண உயர்வை உயர்த்தியதை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நாளை காலை 10:30 மணிக்கு திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் லூர்துசாமி திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெறும். இதில் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது பகுதி குறைகளை தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.