India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நவல்பட்டு பகுதியை சேர்ந்தவர் வசந்த குமார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்த திருச்சி மாநகர போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது வசந்தகுமார் தன் உடலில் கஞ்சாவை மறைத்து வைத்து, அதனை மீண்டும் சிறைக்குள் எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் கைதி காவலில் அலட்சியமாக செயல்பட்ட போலீசார் 4 பேரை திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் முத்துராஜா தெருவில் வசித்து வரும் கிருஷ்ணவேணி (70) என்ற மூதாட்டி அடுப்படியில் வைத்த எண்ணெய் பாக்கெட் வெப்பத்தால் தீப்பிடித்தது. அவர் அணைக்க முயன்று தண்ணீரை ஊற்றியதால் தீ கூரைக்கு பரவி வீடு எரிந்தது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். மூதாட்டி காயமின்றி தப்பினார். இதில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமயபுரம் அருகே அகிலாண்டபுரத்தில் தனியார் ஒர்க் ஷாப் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா பேருந்து மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பஸ் முழுவதும் எரிந்து நாசமாகி எலும்புக்கூடாக காட்சியளித்தது.

திருச்சி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 419
3. வயது: 25 – 34
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 26.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

திருச்சி மாவட்டத்தில் தொழுநோய் கண்டறியும் 2-ம் கட்ட சிறப்பு முகாம், கடந்த ஜன.16ம் தேதி தொடங்கி பிப்.6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் சுகாதாரப் பணியாளர்கள், வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர். மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 16 பேருக்கு தொழுநோய் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோலாலம்பூரில் இருந்து 125 பயணிகளுடன் இன்று காலை சென்னை செல்லும் ஏர் ஏசியா விமானம், சென்னையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக திருச்சி விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதுடன், பயணிகள் அனைவரும் அங்கிருந்து வாகனம் மூலம் சென்னை மற்றும் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<

திருச்சி மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் SHARE செய்து உதவுங்க!
Sorry, no posts matched your criteria.