India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. அதில், ரொக்க பணமாக ரூ.92 லட்சத்து 93 ஆயிரத்து 585, தங்கம் 1 கிலோ 296 கிராமும், வெள்ளி 2 கிலோ 579 கிராமும், அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 114 மற்றும் அயல் நாட்டு நாணயங்கள் 1288 காணிக்கையாக கிடைக்கப் பெறப்பட்டன.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மருதாண்டாகுறிச்சி , மல்லியம்பத்து பகுதியில் சாலையில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரு நாய்களால் தொல்லை ஏற்படுவதாகவும் எனவே அவற்றை பிடிக்கவும் பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று மாநகராட்சி பணியாளர்கள் இப்பகுதியில் சாலைகளில் திரிந்த நாய்களைப் பிடித்து கருத்தடை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பொன்மலைப்பட்டி,தெற்கு உக்கடை விறகு கடை தெருவை சேர்ந்த மாரியப்பன்(37), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மகன் உள்ளனர். கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து மாரியப்பன் நேற்று காலை தேஜஸ் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி ஏர்போர்ட்டில் இன்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் கச்சத்தீவு குறித்து பேசும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம்”ஹெவி வாட்டர்”என்றால் என்னவென்று கேளுங்கள். இதெல்லாம், ராணுவம் சம்பந்தப்பட்டது. இந்திராகாந்தி கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தார் என்று சிலர் கூறுவது தவறானது என்றார்.
திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையில் 19 வயதினருக்கான, கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான திருச்சி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் ஏப்.,21 அன்று சாரநாதன் பொறியியல் கல்லூரியில் காலை 6 :30 மணிக்கு நடைபெறுகிறது. மேலும், தகவலுக்கு 7010757073 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணப்பாறை திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் மோகன் ( 50) இவர், நேற்று தனது வீட்டிற்கும் அருகாமையில் வசிக்கும், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் மணப்பாறை மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், போக்சோ சட்டத்தின் கீழ் மோகன் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாநகரில் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் புழுக்கமான வானிலைக்கு மத்தியில், குடியிருப்பாளர்கள் குளிரூட்டிகள் மற்றும் பிற மின்சாதனங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், மின்சார நுகர்வு 30% அதிகரித்துள்ளது.
இது குறித்து மின்வாரிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தேர்தல்-தேர்வுகள் முடிந்ததும் பராமரிப்பு பணி மீண்டும் துவக்கப்படும் என்றார்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கடந்த 6ம் தேதி ரூ.50 லட்சமும், கடந்த 7ம் தேதி ரூ.1கோடியே 50 லட்சமும், திருச்சி மேற்கு தொகுதியில் ரூ.1,29,09,850 வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுவரை திருச்சியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.3 கோடிக்கு மேல் பிடிபட்டிருப்பதாகவும்,
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகாசியிலிருந்து நேற்று இரவு தீப்பெட்டி பண்டல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை திருச்சி- துவரங்குறிச்சி அருகே வந்தபோது, லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்களில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. தகவலின் பேரில் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு, திருச்சி ரயில் நிலையத்தில் அஞ்சலக ஊழியர்களால் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சி தலைவருமான பிரதீப் குமார் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த ரங்கோலி கோலத்தில் “என் வாக்கு என் உரிமை வாக்களிப்போம்”என்ற வாசகமும் இடம்பெற்று இருந்தது.
Sorry, no posts matched your criteria.