India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் இருந்து திருச்சி மற்றும் தஞ்சையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், திமுக துணை பொதுசெயலாளர் திருச்சி சிவா ஆகியோர் திருச்சி விமான நிலையத்தில் ஆகியோர் எதிர்பாராதவிதமாக சந்தித்தபோது செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

திருச்சி பால்பண்ணை – துவாக்குடி சர்வீஸ் சாலை அமைப்பதற்காக, நில உரிமையாளர்களிடம் விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணை எல்லக்குடி கிராமத்தில் வரும் 20ம் தேதியும், பாப்பாகுறிச்சி கிராமத்தில் 24ம் தேதியும், அகரம் கிராமத்தில் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. விசாரணை முடிவுற்றவுடன் 3 கிராமங்களுக்கும் தீர்ப்பானை பிறப்பிக்க, துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் கேண்டீனில் குளிர்பானம் வாங்கி அருந்தியபோது, அதில் பல்லியின் வால் கிடந்துள்ளது. இதனைக் குடித்த 6 மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டதால், திருச்சி அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

திருச்சி மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!

திருச்சியில் இன்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியது: ‘வரும் சட்டமன்ற தேர்தலில் நானும் போட்டியிடுவேன். படையை வழி நடத்தி செல்பவர்களும் களத்தில் தான் இருக்க வேண்டும்.எந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்பது குறித்தும்,நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்?என்பது குறித்தும் 21-ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்’ என்றார்.

திருச்சி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <

திருச்சி மக்கள் நலன் கருதி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வாடகை வீடு மோசடிகளில் சிக்க வேண்டாம் எனவும், போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம், வீட்டின் உரிமையாளர் மற்றும் ஆவணங்களை முழுமையாக சரிபார்க்காமல் அவசர கதியில் யாரிடமும் பணம் கொடுக்க வேண்டாம். வாடகை ஒப்பந்தம் இல்லாமல் யாரிடமும் பணம் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர், அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே இருப்புபாதை போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவரின் அங்க அடையாளங்களை வெளியிட்டு, அவர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, உப்பிலியபுரம், வையம்பட்டி,மணப்பாறை, மணிகண்டம், துறையூர் ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 6 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு 35 வயதிkகுட்ப்பட்டவர்கள் சுய உதவிக்குழுவில் 5 வருடம் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் 0431-2412726 என்ற தொலைப்பேசி மூலமாக விவரங்களை தெரிந்து கொள்ளாலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.