India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி, பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை 14.5 கி.மீ நீளத்திற்கு, திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சர்வீஸ் சாலை அமைக்கும் பணிக்காக 9 கிராமங்களில் நிலம் எடுப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. மேலும் 7 கிராமங்களில் நிலம் எடுப்பு பணி முடிக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <

திருச்சி, பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை 14.5 கி.மீ நீளத்திற்கு, திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சர்வீஸ் சாலை அமைக்கும் பணிக்காக 9 கிராமங்களில் நிலம் எடுப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. மேலும் 7 கிராமங்களில் நிலம் எடுப்பு பணி முடிக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இந்திய அஞ்சல் துறை ‘POMIS’ எனும் பெயரில் சூப்பரான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும், முதலீடு செய்த பணத்திற்கேற்ப மாதந்தோறும் மிகச்சரியாக வட்டி வழங்கப்படும். எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வட்டியாக வழங்கப்படும். மேலும் 5 வருடங்களுக்கு பிறகு முதலீடு செய்த பணம் திருப்பி வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 25.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

கல்லக்குடி சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுமதி (35). இவரது கணவர் கடந்த டிசம்பர் மாதம் இறந்த துக்கத்தில் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் விரக்தியடைந்த அவர், உணவில் விஷம் கலந்து தனது மகள்களுக்கு கொடுத்து, தானும் உண்டுள்ளார். இதில் சிகிச்சை பலனின்றி சுமதி, மூத்த மகள் அனுசுயா ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து கல்லக்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் இன்று (பிப்.17) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக தொட்டியம், அரங்கூர், பாலசமுத்திரம், தோளூர்பட்டி, எம்.புதூர், காடுவெட்டி, கொளக்குடி, தும்பலம். சேருகுடி, சூரம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

இந்திய தேர்தல் ஆணையத்தால் வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு, தொடர்புடைய நபர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், இறுதி வாக்காளர் பட்டியலானது வரும் 23ம் தேதி வெளியிடப்படும் என திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.