India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் க.கார்த்திகேயன், 10 மீட்டர் ஏர் ரைபிள் சுடும் பிரிவில் திருச்சி ரைபிள் கிளப் சார்பாக கலந்து கொண்டு வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி 2வது இடம் பிடித்தார். மேற்படி, துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு நேற்று திருச்சி ரைபிள் கிளப் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. திருச்சி ரைபிள் கிளப் மொத்தம் 32 பதக்கங்களை கைப்பற்றியது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலின் பிரதான நுழைவு வாயில், லாரி மோதி சேதமடைந்த நிலையில் பாதுகாப்பு கருதி முழுவதும் இடிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய நுழைவு வாயில் மிக பிரமாண்டமாகவும், தமிழ்நாட்டில் மிகப்பெரிய நுழைவு வாயிலாகவும் அமைக்கப்படுகிறது. மேலும் வாயிலில் அம்மன் உருவம், விநாயகர், முருகன், கருப்பசாமி மற்றும் ரெங்கநாதர் உருவமும் சிலையாக அமைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லா MEMU ரயில் வார இறுதியில் இயக்கப்படும். இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக இன்று இரவு 11 மணிக்கு விழுப்புரம், சிதம்பரம், தஞ்சாவூர் வழியாக காலை 6.40மணிக்கு திருச்சி சென்றடையும். மறுமார்க்கத்தில் ஞாயிறு இரவு 10.30க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு காலை 5.50க்கு தாம்பரம் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
திருச்சி அதிமுக புறநகர் மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகின்ற 12ஆம் தேதி தொட்டியம் ஒன்றிய முழுவதும் புதிய உறுப்பினர் கார்டு வழங்குதல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதில் மணமேடு, சீனிவாசநல்லூர், தோளூர்பட்டி, காடுவெட்டி உள்ளிட்ட பகுதிகளின் புதிய உறுப்பினர்களுக்கு கார்டு வழங்க உள்ளதால் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்தில் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான இடம் என முறையிட்டதால் பத்திரப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது திருச்செந்துறை கிராமத்தில் 389 ஏக்கர் நிலங்களை வாங்கவும் விற்கவும் தடையில்லை எனவும் பத்திரப்பதிவு செய்வதற்கு எந்த தடையும் இல்லை எனவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டு கழகம் மூலமாக 2022-23 மற்றும் 2023-24ஆம் ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு பயின்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தினருக்கு HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, திருச்சியைச் சேர்ந்த தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நூறு நிகழ்ச்சிகளும், அதனை தொடர்ந்து, நூற்றாண்டு நிறைவு விழாவாக பத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாக்களை நடத்தி முடித்த, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார்.
திருச்சி மாவட்ட தடகளசங்கம் சார்பில், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று மற்றும் நாளையும் மாவட்ட தடகளப் போட்டிகள் நடக்கிறது. முதல் நாளான இன்று விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு, மற்றும் 18,20 வயதுக்கான 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 5000 மீட்டர் குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இதில், சுமார் 2,000 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், பயன்பெற 9 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாதவர்கள் தகுதியுடையவர் ஆவார். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை எழுத படிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும். எனவே தகுதி உடைய திருச்சியை சேர்ந்த பதிவுதாரர்கள் விண்ணப்ப படிவத்தை, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பெற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் அடுத்த போசம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் பொன்னுமணி என்பவர் மூளை முடக்கு வாதம், அறிவு சார்ந்த குறைபாடு உடைய மகளுக்கு சக்கர நாற்காலி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி, இன்று மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன் மனுதாரர் வீட்டிற்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து, ரூ.8,000 மதிப்பிலான சக்கர நாற்காலியினை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.