Tiruchirappalli

News April 14, 2024

மலைக்கோட்டையில் சித்திரை திருவிழா

image

திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டை சாமி கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொடிமரத்திற்கு வந்தார். அதன் பின்பு தீப ஆரத்திகள் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

News April 14, 2024

திருச்சி: கலெக்டர் எச்சரிக்கை

image

திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் நேற்று விடுத்த அறிக்கையில், மக்களவை தேர்தலில் , வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், என்றும். மேலும் வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெறாமல் வீட்டிற்கு முன் கட்சியின் சின்னத்தின் ஸ்டிக்கர் ஒட்டுவது வரைவது போன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

News April 14, 2024

திருச்சி: திமுக பிரமுகர்கள் கைது

image

திருச்சி இபி ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விதிமுறைகளை மீறி , திமுக வார்டு செயலாளர் உட்பட மூன்று பேர் அங்கு திமுக கொடியையும் வேட்பாளரின் சின்னத்தையும் உரிய அனுமதி பெறாமல் கட்டிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில், தேர்தல் நடத்தை விதி மீறல்களை, மீறியதாக கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 13, 2024

திருச்சி மீறினால் கடும் நடவடிக்கை!

image

திருச்சி ஆட்சியர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, எட்டரை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவியான திவ்யா வீட்டில் பிடிபட்ட ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த பணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.மேலும் வீட்டின் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் வீட்டின் முன்பு கட்சியின் சின்னத்தை ஸ்டிக்கராக ஒட்டுவது, வரைந்தாலோ கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News April 13, 2024

திருச்சியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு

image

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் திருச்சி மாவட்டம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 13, 2024

திருச்சி: கட்டாயம் வாக்களியுங்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அது பொதுமக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எனவே கட்டாயம் பொதுமக்கள் அனைவரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று வாக்குச்சாவடிக்கு சென்று தவறாமல் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

News April 13, 2024

காவிரி ஆற்றில் தேர்தல் விழிப்புணர்வு

image

திருச்சிராப்பள்ளி காவிரி ஆற்றில் எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரி மாணவ, மாணவிகள் உருவாக்கியுள்ள மணல் சிற்பத்தையும், தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளையும் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமார் இன்று பார்வையிட்டார்.
மேலும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அதனை மாணவ, மாணவிகள் என அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

News April 13, 2024

திருச்சியில் 5 நாள் விடுமுறை: வெளியான அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை மூடப்படும். மேலும் மகாவீர் ஜெயந்தியான ஏப்ரல் 21, மே 1ஆம் தேதி ஆகிய நாள்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

News April 13, 2024

திருச்சி: எட்டரை ஊராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு

image

திருச்சி குழுமணி அருகே அதிமுக பிரமுகர் அன்பரசனின் மனைவி, எட்டரை ஊராட்சி தலைவரான திவ்யா. அவரது வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறையினர் சோதனை செய்ததில் ரூ.1 கோடிக்கு மேல் பணம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரித்த வருமான வரித்துறையினர் இன்று திவ்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News April 13, 2024

‘கண்டுபிடிப்புகளுக்கு அரசு உதவ வேண்டும்’

image

திருச்சி என்ஐடியில் புத்தகத்தின் சக்தி மற்றும் பயோ மெடிக்கல் கருவிகள் எனும் சிறப்பு சொற்பொழிவு நேற்று நடந்தது. இதில் டிஆர்டிஒ பிரமோஸ் திட்ட முன்னாள் தலைவர் சுந்தர்ராஜன் பேசுகையில், சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி ஆகிய துறைகள் எந்த காலத்திலும் சுணக்கம் அடையாது. சிறந்த எதிர்காலம் உள்ள இந்த மூன்று துறைகளிலும், மாணவர்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.