Tiruchirappalli

News August 12, 2024

திருச்சி கல்லூரி தேசிய அளவில் 9வது இடம்

image

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே என்.ஐ.டி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், தேசிய அளவிலான பொறியியல் கல்லூரி தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதல் பத்து இடங்களில் 9வது இடத்தை தொடர்ந்து திருச்சி என்.ஐ.டி கல்லூரி பிடித்துள்ளது.

News August 12, 2024

திருச்சிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை கிளம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 470 பேருந்துகள் இயக்கப்படும். மேலும் ஆகஸ்ட் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் 365 பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 12, 2024

திருச்சி விமான நிலையத்திற்கு பேருந்து சேவை

image

திருச்சி விமான நிலையத்திற்கு ஆட்டோக்கள் எதுவும் உள்ளே வராத காரணத்தினால் தனியார் டாக்ஸி மூலம் 30 ரூபாய் செலுத்தி நுழைவு வாயில் வரை செல்லலாம் என்று விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்தது. தற்போது மத்திய பேருந்து நிலையத்திலிருந்து விமான நிலையத்தில் புதிய முனையம் வரையிலும் பேருந்து இயக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

News August 12, 2024

நம்ம திருச்சியில் இப்படியொரு இடமா??

image

திருச்சி மக்களே உங்களுக்கு தெரியுமா, இனி சுற்றுலாவுக்கு ஊட்டி, கொடைக்கானல் போக தேவையில்லை. குறிப்பாக முக்கொம்பு, பட்டாம்பூச்சி பூங்கா கூட போக தேவையில்லை. நம்ம திருச்சி நகரத்தின் அருகிலேயே ஒரு அருமையான சுற்றுலா தளம் உள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டில் திருச்சியில் துவங்க பட்ட பெல் வளாகத்தில் உள்ள பூங்காவில் மான் பார்க் உள்ளது. மேலும் ஊட்டி, கொடைக்கானலில் உள்ளது போல் இங்கும் ஒரு குட்டி ரயில் செல்கிறது.

News August 12, 2024

சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

திருச்சி நவல்பட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 2ஆவது கணவர் மாரிமுத்துவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது முதல் கணவருக்கு பிறந்த 13 வயது சிறுமிக்கு மாரிமுத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும், வெளியே கூறினால் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இந்நிலையில், அப்பெண் அளித்த புகாரின் படி போலீசார் மாரிமுத்துவை நேற்று கைது செய்தனர்.

News August 12, 2024

திருச்சியில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்

image

திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (ஆக.13) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், உறையூர் ஹவுசிங் யூனிட், கீரைக் கொல்லைத்தெரு, சீராத்தோப்பு, சத்திரம் பேருந்து நிலையம், EB. ரோடு ஏகிரிமங்கலம், காவேரிநகர், முத்தரசநல்லூர், ஜீயபுரம், தேவானுர், அரசங்குடி உள்ளிட்ட பிற பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

News August 11, 2024

திருச்சி மாஜி எதிர்க்கட்சி தலைவரிடம் வாழ்த்து

image

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாநில இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர். சிவபதி தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து, வாழ்த்துக்களும் ஆசியும் பெற்றார். இதில் ஒன்றிய நகர கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

News August 11, 2024

திருச்சியில் தேசிய அளவிலான கராத்தே போட்டி

image

திருவானைக்காவலில் 20வது தேசிய அளவிலான ஓப்பன் கராத்தே போட்டி இன்று நடந்தது. இதில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் பாரம்பரியம் மற்றும் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் இளஞ்செழியன் வரவேற்று பேசினார். மேலும் திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கலை குத்து விளக்கேற்றி பரிசுகளை வழங்கினார்.

News August 11, 2024

திருச்சியில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

image

அரியலூர் கீழ்க்கடை பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் பிரத்தீஸ். இவர் நேற்று திருச்சியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்காலில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்று மாணவர் பலியானர். அவரது சரடலம் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News August 11, 2024

திருச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!