India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று இரவு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். இந்த நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், மதிமுக முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வெற்றிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை தினத்தையொட்டி மைசூர் – காரைக்குடி இடையே சிறப்பு ரயில் பெங்களூரு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக, மைசூரில் இருந்து ஆகஸ்ட் 14 மற்றும் 17ஆம் தேதிகளிலும் இரவு 9.30க்கு புறப்படும் என்றும், மறு மார்க்கமாக காரைக்குடியிலிருந்து ஆகஸ்ட் 15 மற்றும் 18ஆம் தேதிகளிலும் காலை 9.10 க்கு புறப்படும் என்பதை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் செய்யவும்
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில் அவதூறாக பதிவிட்ட திருச்சி கே. சாத்தூரைச் சேர்ந்த கண்ணன், திருப்பதி ஆகியோரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் அவதூறு பதிவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துறையூர் அடுத்துள்ள டாப் செங்காட்டுப்பட்டி பகுதிக்கு செல்லும் மலை சாலையில் சிறுத்தை ஒன்று இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இதனால் மலைவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்கள் அச்சத்தை போக்க வனத்துறையினர் விரைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி உண்மை தன்மையை அறிய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி ரயில்வே துறையில் 1376 மருத்துவ காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் வயது மற்றும் கல்வியின் அடிப்படையில் மாறுபடும். இதற்கான விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் பொதுப்பிரிவினருக்கு கட்டணம் ரூ.500, மற்ற பிரிவினருக்கு ரூ.250 ஆகும். இதுகுறித்து மேலும் தகவல்களுக்கு rrbapply.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் அதிமுக திருச்சி புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்ப்பது மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார். நிகழ்வில் தொட்டியம் ஒன்றிய கழக செயலாளர்கள் செல்வராஜ் பிரகாஷ் பேரூர் செயலாளர் காட்டுப்புத்தூர் கே.ஆர். ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முக்கொம்பு மேலாணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் நாளை காலை 6 மணி முதல் 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்திணை பொறுத்து, கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க கூடும் என்பதால் கொள்ளிட கரையோர மக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை ஓட்டி சொல்லவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்
அதிமுக பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, இன்று திருச்சிக்கு வருகை புரிந்தார். அவருக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில், மணிகண்டம் ஒன்றிய புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் அருண் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (44). இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று தங்கியிருந்த அறையில் மயங்கி கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர், மாரடைப்பில் இறந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்தனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 834 மனுக்கள் வருகை தந்தது. இதில், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், இதர சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அரசின் நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.
Sorry, no posts matched your criteria.