Tiruchirappalli

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

image

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT

News August 14, 2024

திருச்சியில் துரை வைகோ கண்டனம்

image

திருச்சி எம்.பி. துரை வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்சி விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது ஒரு சர்ச்சையை கிளப்பி மதவாத அரசியல் செய்வதற்காக தான். இது கண்டிக்கத்தக்க விஷயம். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கி இருப்பதாக பாஜகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

News August 14, 2024

திருச்சியில் சிறப்பு தொழில் கடன் முகாம்

image

திருச்சியில் ஆக.19 முதல் செப்.6 வரை சிறப்பு தொழில்கடன் வழங்கல் முகாம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு சிறப்புத் திட்டங்களின்கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் திருச்சி கிளையில் இந்த முகாம் நடைபெறுகிறது. தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் லட்சம் வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0431-2460498 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

திருச்சியில் முதல்வர் திறப்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக, திருச்சி துவாக்குடி சிட்கோ வளாகத்தில் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி புதிய கட்டிடத்தை பார்வையிட்டார்.

News August 14, 2024

புதிய பெட்ரோல் நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்

image

திருச்சி மகளிர் தனிச்சிறையின் வளாகத்தின் முன்புறம் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து சிறைவாசிகளின் மறுவாழ்வு நோக்கத்திற்காக, முற்றிலும் சிறைவாசிகளை ஊழியர்களாகக் கொண்ட “FreeDom” புதிய பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தை இன்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.

News August 14, 2024

சீமான், சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர்களுக்கு தூண்டுதலாக இருந்ததாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் பதிவிட்ட 17 பேர் மீது திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

News August 14, 2024

திருச்சி நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

image

திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதற்காக தில்லைநகர் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கண்ணன் என்பவரை திருச்சி போலீசார் நேற்று கைது செய்தனர். இதுவரை திருச்சி எஸ் பி வருண் குமாரை சமூக வலைதளத்தில் அவதூறாக விமர்சித்த சீமான், துரைமுருகன் உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

News August 14, 2024

எஸ்எம்எஸ் பார்த்து ஏமாறாதீர்கள் – அலர்ட்

image

திருச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கற்பகசெல்வி கூறுகையில், மின் நுகர்வோரின் கைப்பேசி எண்ணுக்கு மின் கட்டண பாக்கி தொடர்பாக அனுப்பப்படும் குறுஞ் செய்திக்கு கீழ் TANGEDCO வங்கி கணக்கு எண் மட்டுமே அனுப்பப்படும். தனிநபரின் வங்கி கணக்கு எண்ணோ அல்லது செல்போன் நம்பரோ அனுப்புவது நடைமுறையில் இல்லை. இதுபோன்ற போலியான எஸ்.எம்.எஸ்.தகவல்களை பார்த்து நுகர்வோர்கள் பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

News August 14, 2024

பொதுக்குழு கூட்டம் நடத்த ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சியில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு, அனைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்புகளின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் உரிய முறையில் கூட்ட பொருளுடன் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். அதில் சுய உதவி குழு உறுப்பினர்கள் அனைவரும் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

News August 14, 2024

4 உலக சாதனை படித்த திருச்சி சிறுமி

image

திருச்சி தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஸ்ருதிஹா. இவர் 2022ஆம் ஆண்டு தடகளப் பயிற்சியில் துவங்கி 2024ஆம் ஆண்டு கூட்டு மல்லர் கம்பு மற்றும் யோகாவில் கின்னஸ் உலக சாதனை குழு பட்டியலில் இடம் பிடித்தார். மேலும் ஜூனியர் உலக சாதனை புத்தகம், அட்லீ உலக சாதனை புத்தகம், இன்ஜினியஸ் உலக சாதனை புத்தகம், 2024 குழு மலர் கம்பத்திலும் என மொத்தம் நான்கு உலக சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார்.

error: Content is protected !!