India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி திருவானைக்காவலை சேர்ந்த பழனியம்மாள் (45), நேற்று மதியம் தனது மகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். டிவிஎஸ் டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி ஸ்கூட்டரில் மோதியது பழனியம்மாள் கீழே விழுந்தார். பின்னால் வந்த கான்கிரீட் கலவை லாரியில் சக்கரம் அவரது தலை மீது ஏறி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார், லாரி டிரைவர் தப்பி ஓடினார்.போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு.
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த, ஜெயஸ்ரீ திருச்சியில் உள்ள கல்லூரியில் 1 ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கிஷோரை காதலித்து வந்துள்ளார், கிஷோர் மீது பல வழக்குகள் உள்ளன. நேற்று, நண்பர் வீட்டு மாடியில் பேசிக் கொண்டிருந்தபோது, இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு ஜெயஸ்ரீ மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார், இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
வையம்பட்டி அடுத்த பஞ்சந்தாங்கி சொரூபம் வனப்பகுதியில் இன்று காலை ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. தகவலின் பேரில் வனத்துறையினர் மற்றும் வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் மீனாட்சியூர் காளை எனவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்
என்றும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இது குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி கே.கே நகர் பகுதிக்கு உட்பட்ட டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இன்று சிமெண்ட் கலவை ஏற்றி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென டூவீலரில் எதிரே வந்த பெண் மீது மோதியது. இதில், கீழே விழுந்த பெண் லாரி டயரில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு மேல கிருஷ்ணன் கோவில் தெருவில் , குடிநீர் குழாய் தொட்டி அருகே பொது சாக்கடை உள்ளது. அதில் சாக்கடை நீர் தேங்கி அதிலிருந்து கழிவு நீர் வெளியேறி குடிநீர் குழாயில் கலந்து சாக்கடை நீருடன் கலந்து வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. தற்போது மலைக்கோட்டை கிரிவலப் பாதையை மேளதாளத்துடன் தேர் பவணி வந்து கொண்டிருக்கிறது. இத்தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு இறை தரிசனம் செய்தனர். இதனால் அங்கு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
லால்குடி அருகே நன்னிமங்கலத்தை சேர்ந்த அருண்ராஜ் (40). இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த தயாளன் (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் தயாளன் அவரது நண்பர்கள் 5பேருடன் சேர்ந்து அருண்ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அருண்ராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
லால்குடி அருகே நன்னிமங்கலத்தை சேர்ந்த அருண்ராஜ் (40). இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த தயாளன் (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் தயாளன் அவரது நண்பர்கள் 5பேருடன் சேர்ந்து அருண்ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அருண்ராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த எம்பி சிவா, இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டியது நாட்டின் அவசியத் தேவையாக உள்ளது. ஆட்சி மாற்றத்துக்காக மக்கள் தேடும்போது நாங்கள் ‘இந்தியா’ கூட்டணியை முன்னிலைப்படுத்தி அளித்த வாக்குறுதிகளை ஏற்றுள்ளனர். குறிப்பாக, தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரத்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என எம்பி திருச்சி சிவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருச்சி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் பிறந்தநாள் இன்று அதிமுக ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டது. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள அதிமுக அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் பலரும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சிந்தாமணி முத்துக்குமார் பிரம்மாண்ட போஸ்டர் அடித்து கொண்டாடினார்.
Sorry, no posts matched your criteria.