India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<

பெடரல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. சம்பளம்: ரூ.38,666- ரூ. 55,833
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 21-27
6. கடைசி தேதி: 04.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது, பொறியியல் பணிகள் காரணமாக, இன்று(பிப்.25) மற்றும் பிப்.27 ஆகிய தேதிகளில், கும்பகோணம் – மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொத்து மோசடிகள் குறித்து திருச்சி காவல்துறை எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. அதில் ஒரு நிலமோ அல்லது சொத்தோ வாங்கும் முன்
சொத்தின் முந்தைய உரிமையாளர் குறித்த ஆவணங்களை முழுமையாக சரிபார்க்கவும். வில்லங்கங்களை சொத்தின் மீதான கடன்கள், உரிமைகள், சட்ட மோதல்கள் போன்றவற்றை சரிபார்க்கவும். நில பயன்பாடு குடியிருப்பு நிலமா, வணிக பயன்பாட்டின் நிலமா, விவசாய நிலமா என்பதை சரிபார்க்க தெரிவித்துள்ளது.

குற்ற செயல்களை தடுக்கும் வகையில் திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் உங்கள் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் மூலம் குற்றச் செயல்களை தடுக்கலாம். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சந்தேக நபர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக வாட்ஸ்அப் உதவி எண் 8939146100 அழைக்கலாம்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

திருச்சி – காரைக்கால் டெமு ரயில் பொறியியல் பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது இன்று முதல் 26, 27, 28 மற்றும் மார்ச்.1 ஆகிய தேதிகளில் திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களில் தரமின்மை, புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு உதவி எண் செயல்பாட்டில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? ஆம், 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது ஸ்மார்ட் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் உதவி பெறலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

புதுகை மாவட்டம் மேடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர் மணிகண்டன், அகிலா. இவர்களின் 3 மாத குழந்தைக்கு உடல் சரியில்லாததால், துவரங்குறிச்சி உள்ள தனியார் மருத்துவமனைக்கு பைக்கில் சென்று திரும்பியுள்ளனர். அப்போது சேத்துப்பட்டியில் சாலையை கடக்க முயன்றபோது, பின்னால் வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளி ஓடம் எனப்படும் மாசி தெப்ப உற்சவத்தில் 6-ம் நாளான இன்று (பிப்.24) மாலை ஸ்ரீ நம்பெருமாள், யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளி, உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.