Tiruchirappalli

News August 17, 2024

திருச்சி ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

image

திருச்சி கே.கேநகரில் இன்று சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மத்திய மண்டல ஐஜி, டிஐஜி,கமிஷனர்,எஸ்.பி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், திருச்சியில் அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறும் நிலையில், ரவுடி பட்டியலை எடுத்து தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டது.

News August 17, 2024

ரூ.1.25 லஞ்சம்: தனிப்படை எஸ்.ஐ உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

image

வளநாடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிலர் ஏர்கன் வைத்து பறவைகளை வேட்டையாடி உள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தனிப்படை எஸ்.ஐ லியோ ரஞ்சித், காவலர்கள் மணிகண்டன், வீரபாண்டி, ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் ரூ. 1.25 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் நேற்று முன்தினம் எஸ்பி வருண் குமார் அதிரடி நடவடிக்கையாக நால்வரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். SHAREIT

News August 17, 2024

முரசொலி மாறன் பிறந்தநாள்: அமைச்சர் மாலை அணிவிப்பு

image

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னால் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News August 17, 2024

முரசொலி மாறன் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை

image

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே. என்.நேரு தலைமையில் திமுகவினர் முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர் மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News August 17, 2024

ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு அமைச்சர் சிறப்பு பரிசு

image

உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்த ஒவ்வொரு ஆண்டும் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான பொது சுகாதாரம், குடிநீர் வழங்குதல், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட மக்களின் சேவைக்காக 2024ஆம் ஆண்டிற்கான விருது ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு கிடைத்துள்ளது. இதற்கு அமைச்சர் கே.என்.நேரு ஊராட்சி செயலர் கணேசன் 10 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.

News August 17, 2024

கொள்ளிடம் ஆற்றில் முதலை

image

திருச்சி கொள்ளிடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் அதிக அளவு திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று நடை பயிற்சிக்கு சென்ற ஒருவர் முதலை ஆற்றில் செல்வதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று முதலையை தேடிய போது காணவில்லை. இதனால் யாரும் ஆற்றுக்குள் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஷேர் செய்யவும்.

News August 17, 2024

திருச்சி ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக, சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக பரவி வரும் தகவல் வெறும் வதந்தியே என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் வாட்ஸ் அப்பில் பரவி வரும் புகைப்படத்தை யாரும் நம்ப வேண்டாம். மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் ஏதும் நடைபெறவில்லை என மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2024

திருச்சி காங்கிரஸ் சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம்

image

இந்தியா கூட்டணி சார்பில் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் துரை.வைகோ எம்பியின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி அருணாச்சலம் மன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் மாநில செய்தி தொடர்பாளர் வேலுசாமி, மதிமுக ரொக்கையா, வெல்லமண்டி சோமு, பலர் கலந்து கொண்டனர்.

News August 16, 2024

ஸ்ரீரங்கத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன்

image

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அந்த வகையில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று நண்பகல் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபட்டார். மேலும் கோவில் யானை ஆண்டாள் அவருக்கு ஆசிர்வதித்து கொஞ்சியது.

News August 16, 2024

திருச்சியை சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ.கேரளாவில் உயிரிழப்பு

image

திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவியாளர் ராஜ்மோகன் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் பங்கேற்க சென்றுள்ளார். அப்போது ராஜ்மோகனுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் திருச்சி காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!