India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி கருமண்டபம் நகரில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக புகார் வந்தது, இதை அடுத்து கன்டோன்மென்ட் போலீசார், நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில், திருப்பத்தூரை சேர்ந்த செந்தில்குமார் (48) மூன்று பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசாரின் அறிக்கையை புலனாய்வு செய்த கமிஷனர் காமினி செந்தில்குமாரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, நேற்று தேரில் முகூர்த்தக்கால் நடு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தகாலில், புனித நீர் தெளித்து மங்களப் பொருட்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து, முகூர்த்த கால் நடப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள பாத்திமா நகர் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்தில் இரண்டு பேர் இன்று உயிரிழந்தனர். திருவள்ளூரை சேர்ந்த கணேஷ்பாபு(58), சென்னையை சேர்ந்த ரவி(47) ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். மேலும் பாலமுருகன்(44), மதன்குமார்(42) ஆகியோர் படுகாயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மணப்பாறையை அடுத்த கருத்த கோடாங்கிபட்டியை சேர்ந்த பழனிச்சாமி. இவருக்கு அனிதா, ஜோதிகா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகள் ஜோதிகா மணப்பாறை ஜெயம் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதிகா நேற்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையறிந்த மணப்பாறை இன்று போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி அண்ணா சிலை சிந்தாமணி அருகே இன்று செல்வராஜ் என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது, திருச்சியில் சிமெண்ட் இறக்கிவிட்டு கண்டெய்னர் லாரி ஒன்று உசிலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக டூவீலரில் மோதியது. இதில் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி அதிமுக மாஜி அமைச்சர்
மு.பரஞ்சோதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் கோடைகால தண்ணீர் பந்தல் 2ம் கட்டமாக நாளை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியிலும், 28ம் தேதி மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியிலும், 29ம் தேதி துறையூர் சட்டமன்ற தொகுதியிலும், மே1ம் தேதி முசிறி சட்டமன்ற தொகுதியில் திறக்கப்பட உள்ளதால், இதில் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று (ஏப்.25) 104 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மே 1ஆம் தேதி முதல் திருச்சியில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
காவிரியின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் திருவானைக்காவல் ஜம்புகேசுவர்ர கோவில் பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாகும். 60ஆவது தேவரப்பாடல் பெற்ற இத்தலத்தில் புராணகாலத்தில் வெண்நாவல் மரங்கள் நிறைந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கவேரி வறண்டிருந்தாலும், மூலவர் இருக்கும் இடத்திற்கு கீழ் தண்ணீர் கசிவு இருந்து கொண்டே இருக்கும். சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவிலில் 156 கல்வெட்டுகள் இதுவரை கிடைத்துள்ளன
மண்ணச்சநல்லூர் அருகே கீழக்கருங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (32). இவர் சொந்தமாக முறுக்கு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் பலரிடம் கடன் வாங்கி, பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முசிறி மேல தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி தேர் வீதி உலா நேற்று நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ அம்மனை சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர். பின்னர் வேல் மற்றும் கரகத்துடன் முசிறி நகரின் முக்கிய வீதி வழியாக தேரில் அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.