India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், கள்ளர், சீர் மரபினர் பள்ளிகள் இணைப்பதை கண்டித்து அதிமுக 24ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை. ஒரு முடிவை எடுத்த பின் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தலாம். கல்வியை வைத்து கருத்துகளை சொல்லுங்கள். ஆனால் கல்வியை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் என்றார்.
தமிழகம் முழுவதும் 57 மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலராக வீ.பேபி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முன்னதாக மாவட்ட திருச்சியில் அரசு தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றியுள்ளார். மேலும், தனியார் பள்ளி கல்வி அலுவலராக இருந்த சாரதி தஞ்சை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
ராம்ஜி நகர் பகுதியில் உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர், இளநிலைப்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று காலை குடிநீர் விநியோகம் குறித்து திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது இப்பகுதிகளில் 15 வீடுகளில் குடிநீர் விநியோக குழாயில், சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சியது கண்டறியப்பட்டது . மேலும் 15 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை மூலமாக,”தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை”விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.இப்போட்டியில் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.எனவே மேற்கண்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும்www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 25.08.24ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார்
திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ரயில்வே நிர்வாகம் கியூ. ஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது. திருச்சி, தஞ்சை உள்பட 94 முக்கிய ரயில் நிலையங்களில் கியூ ஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தி முன்பதிவு இல்லா டிக்கெட்களை பெற்று கொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் 8 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் பிரதீப் குமார் நேற்று அதிரடி உத்தரவிட்டார். இதன்படி தாசில்தார்கள் லோகநாதன் , அருள்ஜோதி, சேக்கிழார் , சக்திவேல் முருகன், தனலெட்சுமி , செல்வ சுந்திரி, தமிழ்க்கனி, ராஜேஸ் கண்ணன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் என்பவர் குறித்து நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்பிய நிலையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்.பி மான நஷ்ட வழக்கு தொடுத்திருந்தார். அதற்கு ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் நான் பேசினேன், வேறு எதுவும் எனக்குத் தெரியாது என சீமான் பதில் கடிதத்தை தாக்கல் செய்துள்ளார்.
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டத்தின்படி 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், சிறு குறு நிறுவனங்கள் போன்ற அனைத்து பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களைக் விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளக குழு அமைக்க வேண்டும். மேலும், பாதிக்கப்படும் பெண்கள் புகார்கள் அளிக்க பாதுகாப்பு பெட்டி வைக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தபால் துறையில் 44,228 காலிப்பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 137 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியானது. முழு விவரங்களை https://indiapostgdsonline.gov.in/# என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தில் தென்னூர், சிறுகனூர், மேட்டுப்பட்டி, வரகனேரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஆக.21) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதன்படி, தஞ்சை சாலை, தென்னூர், கோவில்பட்டி, இரட்டியபட்டி, தாதனூர், வளநாடு கைக்காட்டி, தொட்டியப்பட்டி, அண்ணாமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.