Tiruchirappalli

News May 1, 2024

சாலையில் கொட்டி கிடந்த ஆதார் அட்டைகளால் பரபரப்பு

image

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா திருவள்ளூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் சாலையில் கொட்டிக் கிடந்தன. இந்த ஆதார் அட்டைகளை அப்பகுதியினர் சேகரித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.முதற்கட்ட விசாரணையில் லால்குடிக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட ஆதார் அட்டைகள் தவறி சாலையில் விழுந்திருக்கலாம் என தெரிவித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

News May 1, 2024

திருச்சியில் ஆதார் உள்ளீடு பயிற்சி.

image

திருச்சி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 தன்னார்வலர்களுக்கு ஆதார் உள்ளீடு பயிற்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. எல்காட் நிறுவனத்தின் கருத்தாளர்கள் ராஜ்குமார் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். நிறைவு நாளான நேற்று மாவட்ட உதவி அலுவலர் அன்பு சேகரன் வாழ்த்தி பேசி தன்னார்வலர்களுக்கு ஆதார் உள்ளீட்டுக்கு தேவையான கருவிகளை வழங்கினார்.

News May 1, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை.

image

தொழிலாளர் தினமான இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது .எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள மது கூடங்கள், வாணிபக் கழகத்தின் விற்பனை மது கடைகள் கட்டாயம் மூடப்பட வேண்டும் .இதனை மீறி விற்பனை செய்தால் ,கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

திருச்சி: சார்பு நீதிமன்றங்களுக்கு இன்று முதல் விடுமுறை

image

ஆண்டுதோறும் சிவில் நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் ஒரு மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த வகையில் திருச்சி மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கு இன்று முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இருப்பினும் மகளிர் நீதிமன்றம், கூடுதல் மகளிர் நீதிமன்றம், பி சி ஆர் நீதிமன்றம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நீதிமன்றம் உள்ளிட்டவை வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

திருச்சி: ஊழியர் சஸ்பெண்ட்.!

image

திருச்சி நியாய விலை கடையில் மது அருந்திவிட்டு ரேஷன் பொருட்கள் வாங்க வந்த சசிகலா பெண்ணை தரக்குறைவாக பேசி,ரேஷன் கார்டை வீசி எறிந்த ஊழியர் நிஸாரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.இந்த வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலர் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரினர்.இந்நிலையில் இன்று கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் துணைப்பதிவாளர் ராஜகுமார் ரேஷன் கடை ஊழியர் நிஸாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

News April 30, 2024

திருச்சி: சாரதாஸ் உரிமையாளர் காலமானார்!

image

இந்தியாவின் மிக பிரம்மாண்டமான ஜவுளி சாம்ராஜ்யத்தில் உருவாக்கிய வியாபார சக்ரவர்த்தி திருச்சி சாரதாஸ் உரிமையாளர் மணவாளன் பிள்ளை இன்று மதியம் 2.30 இயற்கை எய்தினார். அன்னாரது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பூதவுடல் அவரது உயிராகக் கருதப்படும் சாரதாஸ் நிறுவனத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

திருச்சி: பழிக்கு பழி.. 2 பேர் கைது!

image

திருச்சி,அரியமங்கலம் அருகே அதிமுக மாஜி கவுன்சிலர் மகன் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.பட்டப்பகலில் துப்பாக்கி, கத்தியுடன் வந்த மர்ம நபர்கள் முத்துக்குமாரை வெட்டி கொன்று தப்பித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக லோகநாதன், இளஞ்செழியன் இருவரையும் அரியமங்கலம் போலீசார் இன்று கைது செய்தனர். 2021ல் நடந்த சிலம்பரசன் கொலைக்கு பழிக்கு பழியாக தற்போது முத்துக்குமார் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News April 30, 2024

திருச்சி: பணம் பறிக்க முயன்றவர் கைது

image

திருச்சி உய்யக்கொண்டான் திருமலையை சேர்ந்த லோகநாதன் (35).இவர் நேற்று அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சேக் தாவூத் பீமா நகரை சேர்ந்த ரஞ்சித் குமார் லோகநாதனிடம் பணம் கேட்டுள்ளனர். லோகநாதன் மறுத்ததையடுத்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

News April 30, 2024

திருச்சி மத்திய சிறையில் ஆண் கைதிகளுக்கு பெட்ரோல் பங்க்.!

image

திருச்சி மத்திய சிறை வளாக நுழைவாயில் அருகே உள்ள இடத்தில் பெட்ரோல் பங்க் கட்டுமானங்களுக்கு சுமார் 300 சதுரஅடி பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.1.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில் 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோல்,20 ஆயிரம் லிட்டர் டீசல் கொள்ளளவு உள்ள டேங்க்குகள் வைக்கப்பட உள்ளது.இதனை,கண்காணிக்க ஆண் சிறை கைதிகளே 3 சுழற்சி முறையில் பணியமர்த்த படுவார்கள்.இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

News April 30, 2024

திருச்சி: அஞ்சல் வாக்குகள் பிரித்து அனுப்பும் பணி 

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகளை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு, வாக்குகளை பிரித்து அனுப்பும் பணியில் தீவிரம் அடைந்துள்ளனர்.